சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சிங்கிள் ஆளாக விஜய் டிவி சீரியலை தூக்கி நிறுத்திய கதாநாயகன்.. டிஆர்பி ரேட்டிங்கில் விட்ட இடத்தை பிடித்த சீரியல்

Vijay Tv Serial Trp Rating List: விஜய் டிவி சேனலை பொறுத்தவரை ரியாலிட்டி ஷோ, மக்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கான விஷயங்கள் என்று வித்தியாசமான முறையில் மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணி வருகிறது. அத்துடன் சீரியலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புத்தம் புது சீரியல்களை எக்கச்சக்கமாக இறக்கி மக்களிடத்தில் அவர்களுக்கான ஒரு இடத்தை பிடித்து விட்டார்கள்.

ஆனாலும் சன் டிவி சேனல் பக்கத்தில் நெருங்க முடியாத அளவிற்கு இரண்டாவது இடத்தில் தான் டிஆர்பி ரேட்டிங்கில் இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு சீரியல் மட்டும் அதிக புள்ளிகள் பெற்று சன் டிவி பக்கத்தில் நெருங்கும் அளவிற்கு முன்னும் பின்னும் ஆக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் சிங்கிள் ஆளாக இருந்து விஜய் டிவி சீரியலை தூக்கி நிறுத்திருக்கிறார் விஜய் டிவியின் கதாநாயகன் வெற்றி வசந்த் என்கிற முத்து.

இவர் சீரியலுக்கு புதுசாக இருந்தாலும் நடித்த முதல் நாடகத்தின் மூலமாகவே மக்கள் மனதை கொள்ளை அடித்து விட்டார். அந்த வகையில் சிறகடிக்கும் ஆசை சீரியலில் கதை மக்களிடம் ரீச் ஆகியதற்கு முக்கிய காரணம் இவருடைய எதார்த்தமான நடிப்பு என்றே சொல்லலாம். மேலும் இவருக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்பதற்கு ஏற்ப மீனாவும், நடிப்பில் வெளுத்து வாங்கி வருகிறார்.

இவர்களுடைய நடிப்புக்கு மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருவதால் சிறகடிக்கும் ஆசை சீரியல் இந்த வாரம் 8.56 புள்ளிகளைப் பெற்று விஜய் டிவி சீரியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அத்துடன் ரோகினி தற்போது சின்ன சின்ன விஷயங்களில் மாட்டிக்கொண்டு தவித்து வருவதால் அவருடைய கதாபாத்திரத்தை பார்த்து ரசிப்பதற்காக மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இனி ஒட்டுமொத்தமாக ரோகிணியின் தில்லாலங்கடி வேலைகள் வெளிவந்து விட்டால் அந்த வாரம் நிச்சயம் டிஆர்பி ரேட்டிங்கில் ஒட்டுமொத்தமான புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்று விடும். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 6.90 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த கதை இல்லை என்றாலும் இல்லத்தரசிகள் சிலர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதால் இரண்டாவது இடத்தை தக்க வைத்து வருகிறது.

அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் குடும்ப கதையாகவும், ராஜி மற்றும் கதிரின் நடிப்பு சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு மக்களை கவர்ந்திருப்பதால் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 6.81 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதனை தொடர்ந்து 5.73 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் ஆகா கல்யாணம் சீரியலும், சின்ன மருமகள் சீரியல் 5.43 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கிறது.

அடுத்ததாக மக்களின் பேவரிட் சீரியலாக விரும்பிப் பார்க்கும் மகாநதி சீரியல் தான். இந்த சீரியல் 4.18 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது. ஆனால் தற்போது வெண்ணிலாவின் கதாபாத்திரம் அளவிற்கு இருப்பதால் கதை டிராக் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே வருகிறது. இப்படியே போனால் எடுத்து வைத்த பெயர் மொத்தமாக காலியாகும் அளவிற்கு தோல்வியை சந்தித்து விடும்.

Trending News