வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நடிகையிடம் ஓவர் நெருக்கம் காட்டிய ஹீரோ.. விவாகரத்துக் கேட்டு பஞ்சாயத்து கூட்டிய மனைவி

பிரபல ஹீரோ ஒருவரின் வீட்டு பஞ்சாயத்து தான் இப்போது பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது. டாப் ஹீரோவாக இருக்கும் அவர் அடுத்தடுத்த படங்களின் மூலம் புகழின் உச்சியை அடைந்துள்ளார். எந்த அளவுக்கு புகழ் இருக்கிறதோ அதே அளவுக்கு அவரை சுற்றி சர்ச்சைகளும் இருக்கிறது.

சக நடிகை ஒருவருடன் அவருக்கு இருக்கும் பழக்கம் கிசுகிசுவாக வெளிவந்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் அந்த ஜோடி நடித்தது ஊர் வாய்க்கு அவலாக மாறியது. மேலும் அந்த நடிகை இப்போது முன்னணி இடத்திற்கு சென்றது கூட இந்த நடிகரின் சிபாரிசில் தானாம்.

Also read: மாறி மாறி கேவலமாக நடிகர்களை அட்ஜஸ்ட்மென்ட் செய்த 2 நடிகைகள்.. அக்கட தேசத்திலும் செய்த அழிச்சாட்டியம்

ஆரம்பத்தில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்து வந்த நடிகைக்கு நடிகரின் மூலம் தான் வாய்ப்புகள் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவர் அந்த ஹீரோவுடன் நெருங்கி பழகி வாய்ப்பையும் பிடித்திருக்கிறார். இது அரசல் புரசலாக நடிகரின் மனைவியின் காதுக்கும் சென்று இருக்கிறது.

இதனால் பத்ரகாளியான மனைவி நடிகரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம். அது மட்டுமல்லாமல் இனி உன்னோடு வாழ மாட்டேன். எனக்கு விவாகரத்து வேண்டும் என்று குழந்தை, குட்டிகளை அழைத்துக் கொண்டு அப்பா வீட்டிற்கே பொட்டியை கட்டி விட்டாராம். அதை தொடர்ந்து பெரிய பஞ்சாயத்தே நடந்திருக்கிறது.

Also read: ஆடிஷனில் அந்தரங்க போஸ் கொடுக்க சொன்ன இயக்குனர்.. பத்திரகாளியாக மாறிய நடிகை

இதனால் துவண்டு போன அந்த நடிகர் மூன்று நாட்களாக மனைவியின் காலில் விழுந்து சமாதான படுத்த முயற்சி செய்து இருக்கிறார். அதன் பிறகே மனைவி ஓரளவுக்கு இறங்கி வந்திருக்கிறார். தற்போது பிரச்சினை அனைத்தையும் முடித்து வைத்த ஹீரோ இனி எந்த நடிகை பக்கமும் திரும்பக் கூடாது என தான் உண்டு தன் வேலை உண்டு என்று அடங்கி இருக்கிறாராம்.

Trending News