மூன்று வருடத்திற்கு பிறகு மீண்டும் மோதும் கம்போ.. தீபாவளிக்கு சரவெடியை இறக்கும் கார்த்தி

Karthi : தீபாவளி என்றாலே புத்தாட, இனிப்பு என்பதை காட்டிலும் ஞாபகத்திற்கு வருவது புது படங்கள் தான். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு சரவுடியாக இரண்டு படங்கள் வெளியாக உள்ளது.

ஒரு பெரிய ஹிட்டுக்காக கார்த்தி காத்திருக்கும் நிலையில் அவருக்கு கை கொடுக்கப் போகும் படம் தான் சர்தார் 2. இந்த படத்தின் முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இப்போது சர்தார் 2 படம் உருவாகி இருக்கும் நிலையில் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். அதே நாளில் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் மதராசி படம்.

கார்த்தியுடன் தீபாவளி ரேசில் மோத போகும் ஹீரோ

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மதராசி படம் உருவாகி இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு இதே தீபாவளி பண்டிகைக்கு கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படங்கள் மோதிக்கொண்டது.

சர்தார் படம் வரவேற்பு பெற்ற நிலையில் பிரின்ஸ் பெரிய அளவில் போகவில்லை. ஆனால் இப்போது மதராசி மற்றும் சர்தார் 2 இரண்டு படங்களுமே ஆக்சன் படங்களாக வெளியாக இருக்கிறது.

சிவகார்த்திகேயன் அப்போ விட்டதை இப்போது தெறிக்க விடுகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் இந்த காம்போ மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்