திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தியேட்டரில் மட்டுமல்ல ஓடிடி-யிலும் ஆதிக்கம் செலுத்தும் நடிகை.. 10 படங்களுடன் விஜய் சேதுபதிக்கே கொடுக்கும் டஃப்

தமிழ் சினிமாவில் ஹீரோ, வயதான கேரக்டர், திருநங்கை, வில்லன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் சகட்டு மேனிக்க நடிக்கும்  விஜய் சேதுபதி வருடத்திற்கு 10 படங்கள் என்றாலும் அசால்டாக நடித்து தள்ளி விடுவார். அந்த வரிசையில் நடிகை ஒருவர் இப்பொழுது பல படங்கள் நடித்து வருகிறார்.

ஆனால் அது பாதி ஓடிடி-யில் ரிலீஸ் ஆகிறது.  தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு போகவில்லை, இருந்தாலும் அம்மணி கையில் ஏழெட்டு படங்கள் வைத்திருக்கிறார். சினிமாவில் முதலில் பின்னணி பாடகியாக என்ட்ரி கொடுத்த இவர் அதன்பின் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் ரசிகர்களின் மனதில் தனக்கான இடத்தை வகுத்தார்.

Also Read: தங்களுக்கு நேர்ந்த அந்தரங்க சீண்டல்களின் கொடூரத்தை கூறிய நடிகைகள்.. ஆண்ட்ரியா போட்ட அணுகுண்டு

அதன் பின் டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு முன்னேறிய நடிகை ஆண்ட்ரியா கிசுகிசுபிற்க்கும் பஞ்சம் இல்லாத நடிகையாக மாறினார். தற்போது ஆண்ட்ரியா கைவசம் புதிய திருப்பங்கள், காதல் டூ கல்யாணம், மனுசி, பிசாசு 2 போன்ற ஐந்து தமிழ் படங்களும் உள்ளது.

அதிலும் ஆண்ட்ரியாவிற்கு பேய் படம் என்றால் கச்சிதமாக பொருந்துவதால் ஹாரர் படங்களில் பெரும்பாலும் அவருடைய முகம் தான் தெரிகிறது. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தரமான பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியும் ரசிகர்களை வசியம் செய்தார்.

Also Read: பாத்ரூம் டப்பில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா.. அய்யய்யோ! நோயாளி போல மாறிட்டாங்க

மேலும் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பிசாசு 2 படம் விரைவில் வெளியாக இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. அதிலும் இந்த படத்தில் ஆண்ட்ரியா ஆடையின்றி நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுமட்டுமின்றி பிறமொழிகளில் 4, 5 படங்களும் கையில் வைத்திருக்கிறார்.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் ஆண்ட்ரியா இதற்கு முன்பு கோலிவுட்டே வியந்து பார்த்த விஜய் சேதுபதியை வந்து பாருங்கள் என போட்டி போட்டு நடித்து வருகிறார். இந்த வருடத்தில் இனி வெளியாகும் படங்களில் எல்லாம் ஆண்ட்ரியாவாக தான் தெரியப்போகிறார்.

Also Read: விஜய் சேதுபதியே நினைத்தாலும் இதுமாதிரி ஹிட் இனி கொடுக்க முடியாது.. ஹீரோவாக முத்திரை பதித்த 5 படங்கள்

Trending News