ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கதையை விட எனக்கு கதாநாயகி தான் முக்கியம்.. பிரதீப் ரங்கநாதனின் அடுத்த தில்லாலங்கடி லவ் லீலைகள்

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தை இயக்கியது மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து கடந்தாண்டு பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து, இயக்கிய லவ் டுடே திரைப்படம் சக்கைப்போடு போட்டது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் திரையரங்கு விநியோகம் செய்தது.

இன்றைய கால இளைஞர்கள் தங்களது காதலை எப்படி புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை நகைச்சுவை, செண்டிமெண்ட், காதல் என இப்படம் வெளியானது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் 100 கோடி வரை தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீசாகி வசூலை வாரிக்குவித்தது. இதனிடையே இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அடுத்து என்ன பண்ண போகிறார் என அவரது ரசிகர்கள் வெயிட் பண்ணி வருகின்றனர்.

Also Read: பிரதீப் ரங்கநாதன் மாதிரி வராதுங்க .. லவ் டுடே ஹிந்தியில் ஹீரோ ஹீரோயின் ரெட

அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிரூத் இசையில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க போவதாகவும், அப்படத்தில் நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் உறுதியான அப்டேட் இன்னும் வராமல் உள்ளது. இதனிடையே இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் அசிஸ்டன்ட் இயக்குனரின் கதையில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க போகிறாராம்.

ஏ.ஆர்.ரஹ்மான், இசையில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ள நிலையில், கதையை காட்டிலும் கதாநாயகிக்காகத்தான் பிரதீப் ரங்கநாதன் முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம். இயக்குனர் மிதுன் இயக்கவுள்ள இப்படத்தில் அக்கடு தேசத்து நடிகைகளான ராஷ்மிக மந்தனா அல்லது ப்ரியங்கா மோகன் நடிக்க போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கும் பிரதீப் ரங்கநாதன்.. லவ் டுடே படத்தால் சிம்பு இடத்தை தட்டி தூக்கிய ஹீரோ

இந்த இரு நடிகைகளும் முன்னணி நடிகர்களின் படங்களில் மும்முரமாக நடித்து தென்னிந்திய அளவில் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளனர். இவர்களுள் யாராவது ஒருவருடன் ஜோடி போட்டால் கூட பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் தென்னிந்திய அளவில் அதிகமாகும் என்பதால் இந்த வாய்ப்பை பிரதீப் ரங்கநாதன் பயன்படுத்தியுள்ளாராம்.

என்னதான் இயக்குநராக அறிமுகமாகி ஹீரோவானாலும் தனது தில்லாலங்கடி வேலையை தற்போது பிரதீப் ரங்கநாதன் ஆரம்பித்துள்ளார். முன்னணி நடிகர்களை போலவே பிரதீப் ரங்கநாதனும் தான் படத்தில் யாரு ஜோடியாக தன்னுடன் நடிக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்து வருகிறார். கூடிய விரைவில் இந்த பிரம்மாண்டமான கூட்டணியில் உருவாகப்போகும் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Also Read:டாப் கீரில் செல்லும் பிரதீப் ரங்கநாதன்.. ஜெட் வேகத்தில் உயர்த்திய சம்பளம்

Trending News