செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

கதாநாயகியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்.. சிறகடிக்க ஆசை சீரியலுக்கு டஃப் கொடுக்க வரும் புத்தம் புது சீரியல்

Vijay TV : சின்னத்திரை ரசிகர்களை கவரும் விதமாக விஜய் டிவியில் புத்தம் புது சீரியல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த சீரியல்கள் எல்லாம் தற்போது டிஆர்பி-யில் மற்ற சேனல்களின் சீரியல்களுக்கு பயங்கர டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் சமீபத்தில் துவங்கப்பட்ட சிறகடிக்க ஆசை என்ற சீரியல் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று விஜய் டிவியின் டிஆர்பி-யில் டாப் சீரியல் லிஸ்டில் இருக்கிறது. இப்போது அந்த சீரியலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இன்னொரு புதிய சீரியல் அறிமுகமாக போகிறது.

Also Read: பிக் பாஸில் 7ல் கொண்டுவந்த புது விஷயங்கள்.. நிரம்பி வழியும் ஆண்டவரின் கஜானா

அதிலும் அந்த புத்தம் புது சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மருமகள்தான் கதாநாயகியாக நடிக்கப் போகிறார். இந்த சீரியலை மறைந்த இயக்குனர் தாய் செல்வம் தயாரிப்பு நிறுவனம் ‘தாய் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தான் தயாரிக்கிறது.

இதில் பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் முன்பு நடித்த சாய் காயத்ரி தான் ஹீரோயின் ஆக நடிக்கப் போகிறார். இவருக்கு கதாநாயகனாக ஷங்கரேஷ் நடிக்கிறார். ஏற்கனவே இந்த சீரியல் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதன் தமிழ் ரீமேக்காக ‘நீ நான் காதல்’ என்ற டைட்டிலுடன் துவங்கப் போகிறது.

Also Read: நல்லா இருந்த குடும்பத்தில் கும்மி அடித்த ராட்சசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு பதிலா பிரச்சனை குடும்பம்னு வச்சி இருக்கலாம்

விரைவில் இந்த சீரியலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியல் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீரியலின் கிளைமாக்ஸ் வரும் வாரங்களில் ஒளிபரப்பாகி அதன் தொடர்ச்சியாக ‘நீ நான் காதல்’ என்ற புத்தம் புது சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகிறது.

இந்த சீரியலும் ஒரு இளம் ஜோடிகளின் காதல் கதை என்பதால் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்த சீரியல் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு டஃப் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலை பார்க்க சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்குத் தள்ளிய விஜய் டிவி சீரியல்.. ரொமான்ஸில் பின்னி பெடல் எடுக்கும் டாம் அண்ட் ஜெர்ரி

Trending News