வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தரமான இயக்குனருடன் கூட்டணி போடும் சசிகுமார்.. ஜோடியான குட் நைட் பட நடிகை

சுப்பிரமணியபுரம் படத்துக்குப் பின் கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை எல்லோராலும் கவனிக்கப்பட்டு பேசப்பட்ட சசிக்குமார். அப்படத்திற்குப் பின் சில படங்கள்தான் தான் நன்றாக ஓடின. பல படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றன. அதேசமயம், அவர் தயாரிப்பில் வெளியான படங்களும் போதிய வரவேற்பை பெறாததால் அதிகளவில் கடன் வாங்கியதாகவும், அக்கடனை அடைக்கவே பல படங்களில் நடிக்கத் தொடங்கியதாகவும் அவரே கூறியிருந்தார்.

கடந்தாண்டு அவரது நடிப்பில் மணிந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான அயோத்தி படம் எல்லோர மனதையும் உருக வைத்தது. எனவே படமும் சூப்பர் ஹிட்டானது. இதன் மூலம் மீண்டும் நடிகராக பிஸியாகியுள்ளார் சசிக்குமார்.

அயோத்தி படத்தின் ஹிட் அவரை மீண்டும் பிஸியாக்கியதால், சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கருடன், நந்தன் ஆகிய படங்களும் பெரும் வரவேற்பை பெற்றன. இதனால் தன் படங்கள் ஹேட்ரிக் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார் சசிக்குமார். மேலும், அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

சசிகுமாரின் அடுத்த படத்தில் குட் நைட் பட நாயகி

தற்போது எவிடென்ஸ், ஃபிரீடம், நா நா, பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் சசிகுமாரின் அடுத்த படத்தில் குட் நைட் பட நாயகி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் சசிக்குமார் ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது. இதன் 2 ஆம் கட்ட ஷூட்டிங் சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. அதன்பின் இன்னும் 2 அல்லது 3 ஷெட்யூவில் மொத்தப் படங்களையும் முடித்துவிட வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.

இப்படத்தில், மீதா ரகுநாதன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருவதாக தகவல் வெளியாகிறது. குட் நைட் படம் சூப்பர் ஹிட்டானாலும் கூட, அவருக்கு தொடர்ந்து ஏன் வாய்ப்புகள் வரவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி நிலையில், அவருக் திருமணமானதால்தான் நடிக்கவில்லை எனவும், ஆனால் சசிக்குமார் படத்தின் மூலம் மீண்டும் நடிப்பு பயணத்தை தொடருவார் என கூறப்படுகிறது.

சசிகுமார் படத்தின் இயக்குனர் இவர்தான்!

குக்கூ, ஜோக்கர், ஜிப்சி ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இயக்குனர் ராஜூ முருகன் தான் இப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் இயக்கி கார்த்தி நடித்த ஜப்பான் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் சசிக்குமார்- மீதா ரகு நாதன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News