புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் ஹீரோயினான கதாநாயகி ஷோ புகழ் நடிகை.. கண்ணுக்குழி அழகிக்கு அடித்த ஜாக்பாட் 

Pandian Stores 2: விஜய் டிவியில் 1300 எபிசோட்-க்கு மேலாக  சுமார் ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்  முடிவடைந்ததும் அதன் தொடர்ச்சியாக சீசன் 2 துவங்கப் போகிறது. இதற்கான ப்ரோமோ வெளியாகி சின்னத்திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளனர்.

இந்தப் ப்ரோமோவில் தற்போது சீசன் 1ல் மூர்த்தி கேரக்டரில் நடிக்கும் ஸ்டாலின் முத்து மற்றும் நடிகை நிரோஷா இருவரும் என்ட்ரி கொடுத்திருக்கின்றனர். இவர்களுக்கு மூன்று மகன் இருப்பதாகவும் காட்டுகின்றனர். முதல் பாகத்தில் நான்கு அண்ணன் தம்பிகள் சேர்ந்து இருக்கும் ஆனந்தம் மூவியை அப்படியே காப்பி அடித்தனர்.

இரண்டாம் பாகத்தில் என் மகன் கதையை அடிப்படையாகக் கொண்டு தந்தைக்கு மகனுக்கும் நடக்கும் பாச போராட்டத்தை வைத்து உருட்டப்போகின்றனர். மேலும் இந்த சீரியலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கதாநாயகி ஷோவின் கண்டஸ்டண்ட் ஒருவர் ஹீரோயின் ஆக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

கதாநாயகி நிகழ்ச்சியில் கண்ணுக்குழி அழகியாக ரசிகர்களைக் கவர்ந்த ஷாலினி அந்த ஷோவின் பைனல் வரை சென்றார். ஆனால் டைட்டில் என்னமோ ரூபினா மற்றும் ரூபிசீனா இருவரும் தான் தட்டி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் விஜய் டிவி சீரியலில் கதாநாயகியாக நடிக்க முடியும் என சொன்னார்கள்.

ஆனால் அவர்களுக்கு கூட இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி இருக்கும்போது ஷாலினி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுவிட்டார். இது அவருக்கு அடித்த ஜாக்பாட் என்று சொல்லலாம். கதாநாயகி ஷோ மூலம் ஷாலினிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் இந்த செய்தியை சோசியல் மீடியாவில் வைரலாக பரப்புகின்றனர்.

அதுமட்டுமல்ல ஷாலினி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அந்த வீட்டு மருமகளாக நடிக்கப் போகிறாரா? இல்லை மகளாக நடிக்கப் போகிறாரா? என சின்னத்திரை ரசிகர்கள் மண்டையை பிச்சுக்கிட்டு இருக்கின்றனர்.  கூடிய விரைவில் ஷாலினி எந்த கேரக்டரில் நடிக்கப் போகிறார் என்பதற்கான ப்ரோமோவும் வெளியாகப் போகிறது.

Trending News