வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

7/ஜி ரெயின்போ காலனி-2 படப்பிடிப்பை ஆரம்பித்த செல்வராகவன்.. கதாநாயகி விஷயத்தில் சொதப்பிட்டாரே!

7G Rainbow Colony Part 2 Movie Update: செல்வராகவனின் அடையாளம் 7ஜி ரெயின்போ காலனி அவருக்கு தொடர்ந்து தோல்வி படங்கள் வருவதால் இந்த படத்தை மீண்டும் எடுக்க இருக்கிறார். ஆனால் எதற்காக கதாநாயகி விஷயத்தில் மட்டும் சொதப்பிவிட்டார் என பலரும் ஆதங்கப்படுகின்றனர்.

ஏற்கனவே செல்வராகவனுக்கு டைரக்சன் விட்டு போச்சு என்று கேலி கிண்டல் செய்தவர்களுக்கு. இப்போது இந்த விஷயமே அல்வா சாப்பிடற மாதிரி கிடைத்துவிட்டது. ஆனால் 7/ஜி ரெயின்போ காலனி-2 படத்தை முழு நம்பிக்கையுடன் ஆரம்பித்திருக்கிறார்.

Also Read: நம்பிக்கையினால் டாப் ஹீரோக்களின் பட வாய்ப்பை பெற்ற 5 இயக்குனர்கள்.. தளபதி எடுத்திருக்கும் மிகப்பெரிய ரிஸ்க்

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் வெற்றி பெற்றால் தான் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வரும் என்று முழு வேகத்தில் இறங்கி வேலை செய்ய இருக்கிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்த அதே ரவி கிருஷ்ணா தான் இரண்டாம் பாகத்திலும் நடிக்க போகிறார். முதல் பாகத்தில் நடித்த ஹீரோயின் சோனியா அகர்வால் இரண்டாம் பாகத்தில் இல்லை. இதனால் கதாநாயகி கிடைக்காமல் இருந்த பட குழு தற்பொழுது சங்கர் மகள் அதிதி சங்கரை நடிக்க வைக்க யோசனை செய்து வருகின்றனர்.

Also Read: கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் வாய்ப்பு கேட்டேன்.. செல்வராகவனை ஏங்க விட்டு பார்க்கும் அசுரன்

7ஜி ரெயின்போ காலனிக்கு என்று ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். 19 வருடங்களாக மிகவும் எதிர்பார்த்த படத்தை திரும்பவும் எடுக்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் சோனியா அகர்வாலுக்கு சமமாக ஹீரோயின் வருவார் என்று எதிர்பார்த்து நிலையில் அதிதி சங்கர் பெயரை கேட்டதும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஏனென்றால் அதிதி நடித்த விருமன், மாவீரன் போன்ற இரண்டு படங்களிலும் அவரது நடிப்பு சுத்தமாகவே தெரியவில்லை. ஏதோ செட் பிராப்பர்ட்டி போலவே இருந்தார். இவர் கதாநாயகியாக நடித்தால் 7/ஜி ரெயின்போ காலனி-2 படத்தின் சுவாரசியமே குறைந்துவிடும் என்ற பயத்தில் உள்ளனர். இது இன்னும் உறுதிப்படுத்தவில்லை கூடிய விரைவில் தெரியவரும்.

Also Read: ஒரே படத்தால் ஃபேமஸான செல்வராகவன் பட ஹீரோ.. வாய்ப்புக்காக அலைந்து டிரைவராக சுற்றிவரும் பரிதாபம்

Trending News