புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Sirakadikkum Serial Actress: சிறகடிக்கும் ஆசை சீரியலில் இருந்து சன் டிவிக்கு தாவ போகும் கதாநாயகி.. ஓவர் டார்ச்சரால் எடுத்த முடிவு

Sirakadikkum Serial Actress: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் தற்போது சிறகடிக்கும் ஆசை சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 3க்கு போயிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து மக்களின் பேவரட் இடத்தை பிடித்து விட்டார்கள்.

முக்கியமாக மீனா முத்துவின் காதல் ஒரு சாதாரண கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்தும் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்து விட்டது. இவர்கள் மட்டும் அல்லாமல் அதில் நடிக்கும் அனைவருமே மக்களிடம் அவர்களுக்கான இடத்தை பிடித்து விட்டார்கள்.

அதிலும் முத்து மற்றும் மீனாவை நோகடித்து அதில் குளிர்காய நினைக்கும் ரோகிணியின் கதாபாத்திரம் மக்கள் வெறுக்கும் அளவிற்கு இருந்தாலும் அவருடைய நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டே வருகிறது. ஆனால் நெகட்டிவ் கதாபாத்திரம் என்றாலே மக்களிடம் அதிக திட்டுக்கள் வாங்கி தான் ஆகணும்.

சீரியல் நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்

அப்படித்தான் ரோகிணிக்கு கமெண்ட்ஸ் மூலம் தாறுமாறான எதிர்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இதுனாலயே வெளியே போவதற்கு ரொம்பவே சங்கடமாக இருக்கிறது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். அதன் பின் இதை நினைத்து கொஞ்சம் அப்செட்டில் இருக்கும் பொழுது அவருடைய கணவர் தான் இது அனைத்தும் உன்னுடைய கதாபாத்திரத்துக்கு கிடைத்த விமர்சனம் தான்.

அதை நீ சரியாக செய்யப் போய் தான் உனக்கு இந்த மாதிரியான விமர்சனங்கள் வருகிறது. அதனால் இதை பாசிட்டிவாக நினைத்து உன்னுடைய கேரியரில் கவனம் செலுத்து என்று ஊக்குவிப்பதாக கூறியிருந்தார். அப்படிப்பட்ட இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் இதில் ரோகினி கதாபாத்திரத்தில் நெகட்டிவாக நடித்த பிறகுதான் பிரபலமாக இருக்கிறார்.

தற்போது இந்த வாய்ப்பு இவருக்கு அதிர்ஷ்டமாக அமைந்திருக்கிறது என்று சொல்லும் வகையில் சன் டிவியில் வரும் புது சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. . முதலில் இந்த வாய்ப்பு கிடைத்த பொழுது இவர் யோசித்த ஒரே விஷயம் நெகட்டிவ் ஆக இருந்தால் நடிக்க மாட்டேன் என்று தான்.

ஏனென்றால் சிறகடிக்கும் ஆசை சீரியலில் நெகடிவ் கதாபாத்திரம் நடிப்பதால் ஓவர் டார்ச்சர் அனுபவிக்கிறார். அதனால் தான் இப்படி ஒரு முடிவை யோசித்து வைத்திருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ரோகிணி நடிக்கப் போகும் கேரக்டர் ரொம்பவே பாசிட்டிவாக அமைந்திருக்கிறதாம்.

அதனால் கிடைத்த வாய்ப்பை சரிவர செய்ய வேண்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு ஓகே சொல்லிவிட்டதாக கூறியிருக்கிறார். அந்த வகையில் ரோகினி என்கிற சல்மாவை சன் டிவி சீரியலில் எதிர்பார்க்கலாம். அது எந்த சீரியல் எப்பொழுது வருகிறது என்ற தகவல் கூடிய விரைவில் அவர் பதிவு பண்ணுவார் என்பதையும் தெரிவித்திருக்கிறார்.

Trending News