Vijay Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர இருப்பதால் அதற்கு பதிலாக சில புது சீரியல்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது.
இதில் எதிர்நீச்சல் கதாநாயகி கமிட்டாகும் அய்யனார் துணை, குணசேகரின் தங்கை ஆதிரை நடிக்கப் போகும் தனம் சீரியல், மோதலும் காதலும் சீரியலில் ஹீரோவாக கமிட்டான விக்ரம் மற்றும் முத்தழகு சீரியலில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை இருவரும் சேர்ந்து கலக்கப்போகும் பூங்காற்று திரும்புமா போன்ற இந்த சீரியல்கள் அனைத்தும் அடுத்தடுத்து வரப்போகிறது.
அதே மாதிரி சிந்து பைரவி என்ற சீரியலும் வரப்போவதாக விஜய் டிவி அப்டேட் பண்ணி இருந்தார்கள். இதில் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் திரவியம் மற்றும் மௌனம் ராகம் என்ற சீரியலில் சக்தியாக நடித்த ரவீனா கமிட்டாகி இருந்தார்கள்.
ஆனால் தற்போது வந்த தகவலின் படி இதில் கமிட்டான ரவீனா, சீரியல் ஒளிபரப்பாகுவதற்கு முன்னே விலகிவிட்டார். ஆனால் சமீபத்தில் தான் சிந்து பைரவி சீரியலுக்கான ப்ரோமோவை ரவீனாவை வைத்து விஜய் டிவி வெளியிட்டு இருந்தார்கள். ஆனால் அதற்குள் திடீரென்று ரவீனா சீரியலில் நடிக்க வேண்டாம் என்று முடிவு பண்ணி விலகிவிட்டார்.
அதனால் இவருக்கு பதிலாக வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் கலக்கி கொண்டு வரும் பல்லவி என்கிற ஆர்த்தி சுபாஷ் கமிட்டாகி இருக்கிறார்.
இவர் ஏற்கனவே சன் டிவியில் பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் முக்கிய கதாநாயகியாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த பொழுது இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்க ஆரம்பித்து விட்டது. அத்துடன் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலும் முடியப்போகிறது. அதனால் கதாநாயகியாக சிந்து பைரவி என்ற சீரியல் மூலம் என்ட்ரி கொடுக்கப் போகிறார்.