காதலுக்கு ஓகே, அந்த விஷயத்துக்கு நோ.. விஜய் தேவரகொண்டா நினைப்பில் பாலை ஊற்றிய ஹீரோயின்

தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் விஜய் தேவரகொண்டா தமிழ் ரசிகர்களுக்கும் ரொம்பவே பரிச்சயமானவர் தான். ஏராளமான பெண் ரசிகைகளை பெற்றிருக்கும் இவர் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த லிகர் திரைப்படம் மோசமான வசூலை பெற்று படு தோல்வியை சந்தித்தது.

அதைத்தொடர்ந்து தற்போது அவர் சமந்தாவுடன் நடித்து வரும் குஷி திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இவருக்கும் இவருடைய காதலி ராஷ்மிகாவுக்கும் சிறு மனவருத்தம் ஏற்பட்டிருக்கிறதாம். தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்திலும் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்த போது அவர் மீது காதல் வயப்பட்டார்.

Also read: இளசுகளை காதலிக்கும் படி செய்த மாதவனின் 5 படங்கள்.. புது ட்ரெண்டை உருவாக்கிய அலைபாயுதே

இது குறித்து அரசல் புரசலாக செய்திகள் வெளி வந்தாலும் சம்பந்தப்பட்ட இந்த ஜோடி இதுவரை வாய் திறக்கவே இல்லை. ஆனாலும் சமீபத்தில் இவர்கள் இருவரும் மாலத்தீவில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து சோசியல் மீடியாவையே அதிர வைத்தது. இருந்தாலும் இவர்கள் இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

ஆனால் எத்தனை நாளைக்கு தான் இதை மறைத்து வைத்திருக்க முடியும். எப்படி இருந்தாலும் இந்த விவகாரம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்து தானே ஆக வேண்டும். அதனாலேயே விஜய் தேவரகொண்டா வரும் காதலர் தினத்தன்று தங்கள் காதலை ரசிகர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் இதற்கு அவருடைய காதலி முட்டுக்கட்டை போட்டு இருக்கிறார்.

Also read: நெகட்டிவ் ரோலில் நட்டி கலக்கிய 5 படங்கள்.. மணி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட், மறக்கமுடியாத சதுரங்க வேட்டை

ஏனென்றால் இந்த செய்தியுடன் சேர்த்து திருமண அறிவிப்பையும் வெளியிடலாம் என்று விஜய் தேவரகொண்டா பிளான் செய்திருக்கிறார். ஆனால் ராஷ்மிகா இப்போது முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் தமிழிலும் அவருக்கு இப்போது அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

இதை மனதில் வைத்தே அவர் தன் காதலருக்கு எக்க சக்க கண்டிஷன் போட்டு வருகிறாராம். அது மட்டுமல்லாமல் இப்போதைக்கு திருமணமும் கிடையாது, அறிவிப்பும் கிடையாது என்று விஜய் தேவரகொண்டாவின் நினைப்பில் பாலை ஊற்றி இருக்கிறார். காதலுக்கு ஓகே சொல்லிவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் காதலியின் மீது கடுப்பில் இருக்கும் விஜய் தேவரகொண்டா எப்படியாவது அவர் மனதை மாற்ற முயற்சி செய்து வருகிறாராம்.

Also read: லால் சலாம் படத்திற்கு சூப்பர் ஸ்டார் வாங்கிய சம்பளம்.. கெஸ்ட் ரோலுக்கு இத்தனை கோடியா!