திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தமன்னாவுக்கு மரண பயத்தை காட்டிய ஹீரோயின்.. ஐட்டம் நடிகையாக மாறியதன் பின்னணி

Actress Tamannah: அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்த தமன்னா கடந்த சில வருடங்களாகவே தமிழ் பக்கம் தலை காட்டாமல் இருந்தார். அப்படிப்பட்டவரை நெல்சன் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்திற்காக மீண்டும் அழைத்து வந்துள்ளார்.

அப்போதும் கூட இவர் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் இல்லை. ஆனால் சமீபத்தில் வெளிவந்த காவாலா பாடலில் தமன்னா போட்ட ஆட்டம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சுண்டி இழுத்து உள்ளது. அதனாலயே இப்போது அவருக்கான வாய்ப்புகளும் தேடி வந்து கொண்டிருக்கிறது.

Also read: காவாலா பாடலில் தமன்னா மட்டும்தான்.. என்னது தலைவர் இல்லையா? சீக்ரெட்டை உடைத்த படக்குழு

இது ஒரு புறம் இருந்தாலும் தமன்னா ஹிந்தி பக்கம் அதிக கவர்ச்சி காட்டி நடிப்பது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் சமீபத்தில் வெளியான ஜீ கர்தா வெப் சீரிஸில் இவருடைய கிளாமர் தரிசனம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியது. தமன்னாவா இப்படி என்று பலரும் ஆச்சரியப்படும் அளவுக்கு அவர் முகம் சுளிக்கும் படியாக நடித்திருந்தார்.

இப்படி அவர் மாறுவதற்கு பின்னணியில் என்ன என்று பார்க்கையில் தனக்கான வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற பயம் தான் தமன்னாவுக்கு அதிகமாக இருந்திருக்கிறது. அதிலும் ராஷ்மிகா, பூஜா ஹெக்டே போன்ற நடிகைகள் இப்போது நம்பர் ஒன் இடத்திற்கு போட்டி போட்டு வருகின்றனர்.

Also read: மாமனார், மருமகனுடன் கூச்சமே இல்லாமல் ஜோடி போட்ட 4 நடிகைகள்.. ஜெயிலரில் குத்தாட்டம் போட்ட தமன்னா

இப்படி இளம் நடிகைகளின் வரவு தான் அவரை ஐட்டம் நடிகை ரேஞ்சுக்கு மாற வைத்திருக்கிறது. மேலும் தற்போது அவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்கு முன்பாகவே அடுத்தடுத்த படங்களில் நடித்து கல்லா கட்டி விடவும் தமன்னா பிளான் செய்திருக்கிறாராம்.

அதனாலேயே அவர் அடுத்தடுத்த படங்களில் கூட லிப் லாக் போன்ற காட்சிகளில் தாராளம் காட்ட முடிவு செய்து இருக்கிறார். அந்த வகையில் ராஷ்மிகாவின் இடத்தை தட்டிப் பறிக்கவும் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும் தான் தமன்னா இப்படி ஒரு பிளான் போட்டு களம் இறங்கி இருக்கிறார்.

Also read: மார்க்கெட் இல்லாததால் தர மட்டமாக இறங்கிய தமன்னா.. குடும்ப குத்து விளக்காக நடித்த 5 படங்கள்

Trending News