வெள்ளித்திரையைக் காட்டிலும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் மிகக்குறுகிய காலத்திலேயே மக்களின் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுவார்கள்.
குறிப்பாக கதாநாயகர்களை விட கதாநாயகிகளுக்கு தான் எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் குவியும். அந்த வகையில் தற்போது தனியார் இணையம் நடத்திய சர்வே ரிப்போர்ட்டின் படி தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி சீரியல் நடிகைகளின் டாப் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.
- கண்ணம்மா
- முல்லை
- ரோஜா
- பாக்கியலட்சுமி
- பார்வதி
அதன்படிமுதலிடம் பாரதி கண்ணம்மா சீரியலின் கதாநாயகி ரோஷினி ஹரிப்ரியன். இரண்டாவது இடம் பாண்டியன் ஸ்டோர் முல்லை பாத்திரத்தில் நடிக்கும் காவியா அறிவுமணி.
மூன்றாவது இடம் சன் டிவியில் ரோஜா சீரியலின் கதாநாயகி பிரியங்கா நல்கரி. 4-வது இடம் பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் கேஎஸ் சுஜித்ரா.
ஐந்தாவது இடம் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கும் கதாநாயகி ஷபானா ஷாஜகான். தற்போது இந்த தகவலானது சீரியல் ரசிகர்களிடையே அதிகமாக ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.