
Good Bad Ugly: அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி டீசர் நேற்று மாலை வெளியானது. அதுதான் இப்போது சோஷியல் மீடியாவை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரிஜினல் ஃபேன் பாய் நான் தான் என்னும் அளவுக்கு சம்பவம் செய்துவிட்டார் ஆதிக். இதுவரை நாம் பார்த்து ரசித்து கொண்டாடிய அஜித் படங்கள் அனைத்தையும் கண் முன்னே காட்டிவிட்டார்.
அதன்படி டீசரின் தொடக்கத்தில் டாட்டூ போடுவதில் தொடங்கி இறுதி வரை ஃபயர் தான். தீனா, அமர்க்களம், வாலி, அட்டகாசம், வேதாளம், பில்லா, அசல், ரெட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்தது டீசர்.
பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வந்த AK
சுருக்கமாக சொல்லப்போனால் பழைய பன்னீர்செல்வம் ஆக திரும்பி இருக்கிறார் அஜித். டி ஏஜிங் டெக்னாலஜி எல்லாம் எனக்கு எதுக்கு என சொல்லும் வகையில் எடையை குறைத்து அசத்தியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து படத்தின் கதை இதுதான் என ஒரு செய்தி கசிந்து வருகிறது. அதாவது வில்லனாக இருந்து சிறைக்கு செல்லும் அஜித் திரும்பி வரும்போது மோசமான வில்லனாக இருக்கிறார்.
அவர் தன் எதிரிகளை எப்படி பழிவாங்குகிறார் என்பது தான் கதை. முழுக்க முழுக்க கேஸ்டர் கதையாக ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்ற செய்திகளும் பரவிக் கொண்டிருக்கிறது.
ஆக மொத்தம் ஏப்ரல் 10 தரமான சம்பவம் காத்திருக்கிறது. டீசரை பார்த்து வைப் குறையாமல் இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். இன்னும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ரெய்லர் என லைன் கட்டுகிறது.
அதெல்லாம் வந்தால் இந்த மார்ச் மாதம் முழுவதும் அஜித் திருவிழா தான். ஆக மொத்தம் ஒரே டீசர் இப்போது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்துவிட்டது.