திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காந்தாராவை தூக்கி சாப்பிட வரும் மறைக்கப்பட்ட வரலாறு.. விக்ரமை பார்த்து பார்த்து செதுக்கும் பா ரஞ்சித்

வெறும் பொழுதுபோக்கு அம்சமாக திரைப்படங்கள் வெளிவந்த நிலை மாறி தற்போது வரலாறு சம்பந்தப்பட்ட கதைகளும், குறிப்பிட்ட இன மக்களின் மறைக்கப்பட்ட கதைகளும் திரைப்படங்களாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதில் சமீபத்தில் வெளிவந்த காந்தாரா திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

ரிஷப் செட்டி இயக்கத்தில் கன்னட மொழியில் வெளிவந்த அந்த திரைப்படம் தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வியக்க வைக்கும் காட்சிகளும், திரைக்கதையும் தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட மக்களின் கதையை இவ்வளவு சுவாரசியமாக கொடுக்க முடியுமா என்ற ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அதனால் தான் காந்தாரா படம் இந்த அளவுக்கு வசூல் சாதனையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. தற்போது அதற்கு போட்டியாக தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் தான் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மறைக்கப்பட்ட வரலாறை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

Also read:எல்லாத்துக்கும் தயாராக இருக்கும் விக்ரம்.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பா.ரஞ்சித்

அதாவது இப்படம் கோலார் தங்க வயலில் வேலை செய்யும் மக்களை பற்றிய கதைதான் என்று இயக்குனர் ஏற்கனவே கூறியிருந்தார். இதைப்பற்றி கே ஜி எஃப் திரைப்படத்தில் காட்டப்பட்டிருந்தாலும் அதில் சொல்லப்படாத மற்றும் மறைக்கப்பட்ட பல உண்மைகள் இந்த தங்கலான் படத்தின் மூலம் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

அந்த வகையில் தற்போது ஷூட்டிங் நடைபெற்று வரும் இந்த திரைப்படம் நான் ஸ்டாப்பாக படமாக்கப்பட இருக்கிறது. ஏனென்றால் இந்த படத்திற்காக விக்ரம் முழுவதும் கேரக்டராகவே மாறி இருக்கிறார். அதனாலேயே இந்த படம் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. வரும் மார்ச் மாதம் வரை இந்த படத்தின் சூட்டிங் இடைவிடாது நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Also read:காட்டுமிராண்டியாக ஆக்ரோஷம் காட்டும் விக்ரம்.. பா ரஞ்சித் கூட்டணியில் வித்தியாசமான டைட்டில் வெளியீடு

இதற்கு இடையில் லொகேஷன் மாறும்போது மட்டும் நான்கு, ஐந்து நாட்கள் பட குழுவினருக்கு பிரேக் கொடுக்கப்படுமாம். மற்றபடி ரஞ்சித் இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடித்த பிறகு தான் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற திட்டத்துடன் களமிறங்கி இருக்கிறார். அதற்காக அவர் விக்ரமை பார்த்து பார்த்து செதுக்கி கொண்டிருக்கிறாராம்.

ஏற்கனவே இந்த படத்திற்காக விக்ரம் தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். அது சமீபத்தில் வெளிவந்த போஸ்டரிலேயே தெரிந்தது. அதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் தயாரிப்பாளர் இந்த தங்கலான் ரிலீஸ் ஆகி ஏகப்பட்ட தங்கத்தை அதாவது வசூலை வாரி குவிக்கும் என்று சந்தோஷத்துடன் அனைவரிடமும் கூறிக் கொண்டிருக்கிறார். இப்படி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது விக்ரம் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Also read:கபாலி பிளாப்ன்னு யாரு சொன்னது? 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா, அவிழ்த்து விட்ட தயாரிப்பாளர்

Trending News