திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

12 ஆயிரம் கோடி நிஜ கொள்ளையை வெளிச்சம் போட்டு காட்டிய வினோத்.. துணிவு படத்தில் மறைந்திருக்கும் உண்மை

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் தற்போது ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் இப்போது வரை ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் படத்தில் சொல்லப்பட்டுள்ள தரமான மெசேஜ் தான்.

அதையும் ஒரு மாஸ் ஹீரோ தன்னுடைய ஸ்டைலில் சொல்லி இருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. ஏற்கனவே இந்த திரைப்படம் ஒரு வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் இது ஒரு நிஜ சம்பவத்தை மையப்படுத்தி உருவான திரைப்படம் என்பது ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

Also read: கனவுக்காக வைராக்கியத்தை கைவிட்ட சந்தானம்.. AK 62 அஜித்துடன் நடிக்க இப்படி ஒரு காரணமா?

ஆனால் அதுதான் உண்மை. அதாவது பிரபல வங்கி ஒன்று தங்களுடைய ஆதாயத்திற்காக அப்பாவி பொதுமக்களை ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி பணத்தை ஆட்டையை போட்டு இருக்கிறது. அதுவும் 12,000 கோடியை முழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது. இந்த சம்பவத்தை தான் வினோத் துணிவு திரைப்படத்தின் வாயிலாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.

அதிலும் இந்த கொள்ளைக்கு அதிகார வர்க்கத்தில் இருக்கும் சிலரும் உடந்தையாக இருந்திருப்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எந்தெந்த முறையில் அந்த வங்கி மக்களின் பணத்தை கொள்ளையடித்தது என்பதையும் வினோத் வேற லெவலில் ட்விஸ்ட் வைத்து கொடுத்திருக்கிறார். இதைத்தான் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Also read: வாரிசு, துணிவு படங்களை ரத்து செய்த தியேட்டர்கள்.. அஜித்,விஜய்யை யோசிக்க வைத்த சம்பவம்

இதற்கு முன்பு கூட அவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படமும் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது தான். அந்த வரிசையில் வந்திருக்கும் இந்த துணிவு வங்கிகளை நம்பி ஏமாறும் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை கொடுத்திருப்பதாக பலரும் பாராட்டுகின்றனர். இதை பார்த்துவிட்டாவது மக்கள் ஆசை வார்த்தை காட்டி மயக்கும் வங்கிகளை நம்பாமல் இருக்க வேண்டும்.

ஏனென்றால் லோன், இஎம்ஐ, கிரெடிட் கார்டு என்று பலரும் சிக்கி தவித்துக் கொண்டிருப்பது இது போன்ற வங்கிகளின் ஆசை வார்த்தையை கேட்டு தான். அந்த வகையில் அஜித் துணிவு திரைப்படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் மிரட்டி விட்டுள்ளார். அதனாலேயே இப்போது பலரும் அஜித் அடுத்தடுத்த திரைப்படங்களையும் இதேபோன்று தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Also read: ஆட்டநாயகனாக முன்னேறிய விஜய் எங்க தெரியுமா? துணிவு, வாரிசு 2 நாள் கலெக்சன் இதுதான்!

Trending News