திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இதுவரை ஆனந்த விகடன் கொடுத்த அதிக மதிப்பெண்.. 42 வருடங்களாக உடைக்கப்படாத பாரதிராஜாவின் ரெக்கார்டு

பாரதிராஜா கிராமத்து மனம் மாறாத படங்களை கொடுப்பதில் வல்லவர். இவர் தமிழ் சினிமாவில் பல பிரபலங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். இவரால் சினிமாவில் உயரம் தொட்டவர்கள் பலர். ராதா, ராதிகா, ரேவதி என எண்ணற்ற நடிகைகள் இவரால் சினிமாவில் அறிமுகமானவர்கள் தான்.

அந்த வகையில் நடிகர், நடிகைகளுக்கு சரியான கதாபாத்திரத்தை கொடுத்து ரசிகர்களின் இடம் பிடிக்க செய்துள்ளார். இவருடைய பல படங்கள் காலத்தால் அழியாத படங்களாக அமைந்துள்ளது. அந்த வகையில் இவருடைய ஒரு படத்திற்கு ஆனந்த விகடன் அதிக மதிப்பெண் கொடுத்துள்ளது.

Also Read :கடைசி வரை பாரதிராஜாவால் இயக்க முடியாமல் போன நடிகை.. வாய்ப்பு கை நழுவிப் போன துரதிர்ஷ்டம்

எப்போதுமே ஆனந்த விகடன் கொடுக்கும் விமர்சனம் பெரிய அளவில் பேசப்படும். அந்த அளவுக்கு மிகவும் நேர்மையாக அவர்களது ரேட்டிங் இருக்கும். அந்த வகையில் பாரதிராஜாவின் ஒரு படத்திற்கு 62.50 மதிப்பெண்கள் கொடுத்துள்ளது. 42 வருடங்களாக இந்த படத்தின் சாதனையை எந்த படைத்தாலும் முறியடிக்க முடியவில்லை.

அதாவது காதல் இளவரசனாக வலம் வந்த கமல் வித்யாசமாக சப்பானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய படம் 16 வயதினிலே. மயிலு கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி, பரட்டை என்ற கதாபாத்திரத்தில் ரஜினி என ஒவ்வொருவரையும் செதுக்கியிருந்தார் இயக்குனர் பாரதிராஜா.

Also Read :ரஜினி, விஜயகாந்த் கொடுத்த மோசமான ஃபெயிலியர்.. நம்ப வச்சு கழுத்தறுத்த பாரதிராஜா

இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இப்படத்தில் செந்தூரப்பூவே பாடலுக்காக பாடகி ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது. கமல், ரஜினி, ஸ்ரீதேவி, காந்திமதி என ஒவ்வொருவரும் இப்படத்தில் நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார்கள்.

காலத்தால் அழியாமல் இன்றும் இளமையுடன் இருக்கும் 16 வயதினிலே படத்திற்கு தான் ஆனந்த விகடன் அதிக மதிப்பெண் கொடுத்துள்ளது. தற்போது வரை பாரதிராஜாவின் இந்த ரெக்கார்டை எந்தப் படத்தாலும் முறியடிக்க முடியவில்லை.

Also Read :பாரதிராஜாவை போல் முத்திரை குத்தப்பட்ட இயக்குனர்.. சிட்டில உங்க பாச்ச பலிக்காது!

Trending News