திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அசோன் செல்வனை கைவிட்ட இயக்குனர்.. கடைசில தனுஷும் கண்டுக்கலயே.. பறக்கதுக்கு ஆசைப்பட்டா இப்படித்தான்!

தமிழ் சினிமாவில் அவ்வப்போதுதான் த்ரில்லர் பாணியில் படங்கள் வெளியாகிறது. அதில், ராட்சசன், சைக்கோ, துருவங்கள், பரம்பொருள் ஆகிய படங்களின் வரிசையில் கடந்தாண்டு வெளியான படம் போர்தொழில்.

இப்படத்தை ஐ ஹெட் யூ, ஐ லவ் யூ, நாங்கள் ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். சரத்குமார், அசோக் செல்வன் இருவரும் முதன்மைக் கேரக்டரில் நடித்திருந்த இப்படத்தில், லிஷ சிண்ணு, சிம்ரன் ஜெய்ன், சுனில் சுகதா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்.

இது ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் வந்த கதையாக இருந்தாலும், விறுவிறுப்பாக திரைக்கதை ரசிகர்களை சீட்டில் நுனியில் உட்கார்ந்து பார்க்க வைப்பதாக இருந்தது. அதுவே இப்படத்திற்கு வெற்றியைத் தேடி வந்து வசூலும் குவிந்தது.

இப்படத்தின் வெற்றி அசோக் செல்வனுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது. சரத்குமாருக்கு கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்ததால் இருவருக்கும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தனுஷ் படத்தை இயக்கப் போனவருக்கு என்ன நடந்தது?

இப்படத்தின் இயக்குனரே அடுத்த படத்தில் அசோல் செல்வனை ஹீரோவாக நடிக்க வைப்பதாகவும் அப்படத்தை அசோக் செல்வனின் அக்கா தயாரிப்பதாகவும், இதற்கான வேலைகளும் போய்க்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியானது.

அந்த நேரத்தில், தனுஷிடம் இருந்து விக்னேஷ் ராஜாவுக்கு அழைப்பு வரவே, அவரிடம் கதை கூறியுள்ளார். அக்கதை தனுஷுக்கு பிடித்துப் போக, வேல்ஸ் நிறுவனத்திடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கொடுத்து அவர்களிடமும் கதை கூற அனுப்பி இயக்குனரை வைத்துளார் தனுஷ்.

இது பெரிய ஹீரோயின் படம் என்பதால், விக்னேஷ் ராஜாவையும் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. அதாவது இவர்கள் கூட்டணியில் உருவாகும் 2 வது படத்திற்கு பிசினஸ் ஆகும் எண்ணத்தில் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், தனுஷ், மதுரை அன்புவின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆனதால், தற்போது, அசோக் செல்வனிடமே விக்னேஷ் ராஜா வந்துவிட்டார் எனத் தகவல் வெளியாகிறது.

நெட்டிசன்கள் கலாய்!

ஒரு படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது அப்பட வேலைகளை முடித்துவிட்டு சென்றால்தான் நல்லது. அப்படியிருக்க பெரிய நடிகரின் படம் கிடைக்கிறதே என்று சென்றால் கடைசியில் இந்த இயக்குனருக்கு வந்த நிலைதான் வரும் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Trending News