செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நயன்தாராவால் மருத்துவமனைக்கு சீல்.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என எஸ்கேப்

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில், இந்த செய்தி இணையத்தில் நாளுக்குநாள் வைரலாகி வருகிறது. நயன்தாராவுக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்வது சட்டத்தில் இடமில்லை என பலரும் தெரிவித்திருந்தன.

இதனிடையே அண்மையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்களை தமிழக அரசிடம் சமர்ப்பித்த நிலையில், நயன்தாராவின் குடும்ப நல மருத்துவர் ஒருவரின் ஆலோசனைப்படியே வாடகைத் தாயை தேர்ந்தெடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Also Read : ஐஸ்வர்யா ராயும் இல்ல, நயன்தாராவும் இல்ல.. அஜித்க்கு 5ம் முறையாக ஜோடியாகும் இளவரசி

இதனிடையே 2021ஆம் ஆண்டு வாடகைத் தாயை தேர்ந்தெடுத்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஆபரேஷன் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்தது. இதுகுறித்து தற்போது அந்த தனியார் நிறுவனத்திடம் விசாரணை நடத்தியபோது, நயன்தாராவின் குடும்ப நல மருத்துவரின் ஆலோசனைப்படியே தாங்கள் இதனை செய்தோம் என கூறியுள்ளனர்.

இதில் குழம்பிய தமிழக அரசு, நயன்தாராவையும், விக்னேஷ்சிவனையும் பரிசோதனை செய்யாமலேயே குடும்ப நல மருத்துவர் சொன்னதைக் கேட்டு இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் வாடகை தாய் பற்றிய முறையான ஆவணங்கள் அந்த மருத்துவமனையில் இல்லாததால் பிரபல தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை எதிர்பார்க்காத அந்த மருத்துவமனை இப்பொழுது மிகப்பெரிய சிக்கலில் உள்ளது.

Also Read : நயன்தாரா மார்க்கெட்டை இறக்க சமந்தா செய்த வேலை.. ட்ரெண்டிங்கில் இருக்கும் யசோதா ட்ரெய்லர்

பல கருத்தரிப்பு மருத்துவமனைகள் சென்னையில் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே அதிகரித்து வரும் நிலையில், விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு சரியான ஆவணங்களை வைத்துக்கொள்ளாமல், பிரபல நடிகைக்கு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொடுத்ததற்காக மருத்துவமனையை இழுத்து மூடும் அளவிற்கு விஷயம் தீயாய் பரவி உள்ளது.

இதைப்பற்றி கவலைப்படாமல் நயன்தாராவும் , விக்னேஷ் சிவனும் இந்த விஷயத்தில் தலையிடாமல் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என தனது இரு ஆண் குழந்தைகளோடு சந்தோஷமாக புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : என்னது நயன்தாராவுக்கும் குழந்தைக்கும் சம்பந்தம் இல்லையா? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட டாக்டர்

Trending News