புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சாந்தனுக்கு கிடைத்த பிரம்மாண்ட மேடை.. தெரியாமல் செய்த உதவிக்கு நன்றிகடன் செய்த தயாரிப்பாளர்

டாப் ஹீரோக்களுக்கு இணையாக சாந்தனு படத்தின் பிரம்மாண்ட ஆடியோ லான்ச் துபாயில் நடைபெறுகிறது. அதாவது சாந்தனு வாரிசு நடிகராக இருந்தாலும் இன்னும் வெற்றி படம் கொடுக்காமல் தடுமாறி வருகிறார். ஆனால் அவருக்கு ஒரு சிறந்த ஓப்பனிங் ஆக இராவண கோட்டம் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதயானை கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமார் இயக்கத்தில் இராவண கோட்டம் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இந்த படத்தின் நிகழ்ச்சியை துபாயில் படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்து பிரம்மாண்ட ஏற்பாடு செய்துள்ளார்.

Also Read : பல வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. டாப் நடிகர்களுக்கு போட்டியாக வரும் சாந்தனு

ஒரு வளர்ந்து வரும் நடிகரின் படத்திற்கு கண்ணன் ரவி இவ்வளவு செலவு செய்ய காரணம் இருக்கிறதாம். அதாவது தயாரிப்பாளர் கண்ணன் ரவி ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்தப் பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்காததால் போலீஸ் கேஸ் வரை இது சென்றுள்ளது.

கடைசியில் போலீசும் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர். கண்ணன் ரவிக்கு தெரிந்த பாக்யராஜ் ரசிகர் மன்ற தலைவரிடம் இது குறித்து கூறியுள்ளார். அப்போது கண்ணன் ரவி யார் என்பது தெரியாமல் அந்த போலீசாருக்கு போன் செய்து இந்த திருமணத்தை நடத்தி வைக்குமாறு பாக்யராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read : 80-களில் கமலை மிஞ்சிய சம்பளம் வாங்கிய பாக்யராஜ்.. டாப் 6 நடிகர்களின் சம்பள லிஸ்ட்

அந்தச் சமயத்தில் பிரபல நடிகராக இருந்த பாக்யராஜ் கூறியதால் இவர்களது திருமணமும் நடைபெற்றது. அதன் பின்பு ஆயிரம் ரூபாயுடன் கண்ணன் ரவி தனது குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு கடின உழைப்புக்கு பின்பு இப்போது தொழிலதிபராக மாறி உள்ளார்.

மேலும் பாக்யராஜ் செய்த உதவியால் அவரது மகன் சாந்தனுக்கு இப்போது கண்ணன் ரவி பல கோடிகள் செலவு செய்து நன்றி கடனை செலுத்தியுள்ளார். மேலும் சாந்தனுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக அமையும் என அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Also Read : ஹாலிவுட் க்கு நிகராக தமிழில் வெளிவந்த 5 திருட்டு காட்சிகள்.. துணிவு அஜித்தை மிஞ்சிய ருத்ர பாக்யராஜ்

Trending News