வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அதை செஞ்சிட்டா நான் சோலிமுடிஞ்சேன்.. ரக்ஷிதா கணவனை பிரிய பயில்வான் கூறிய காரணம்

சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தனது யூடியூப் சேனலில் வெளிப்படையாக பேசி வருகிறார். சிலர் இவர் பேசுவதற்கு சம்மதம், எதிர்ப்பு என எதுவும் தெரிவிக்காமல் உள்ளனர். ஆனால் பலர் இவரது யூடியூப் சேனலுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

எதற்கும் அசராத பயில்வான் தொடர்ந்து தனது யூடியூப் சேனலில் நடிகைகளின் அந்தரங்க விஷயத்தை பேசி வருகிறார். தற்போது பியில்வானுக்கு தீனி போட்டது போல் பிக் பாஸ் நிகழ்ச்சி கிடைத்துள்ளது. இதில் உள்ள போட்டியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்ந்து பேசி வருகிறார்.

Also Read :பிக் பாஸ் அசீம் மனைவி, குழந்தையை பார்த்துள்ளீர்களா.. வெளியான வைரல் புகைப்படம்

தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்ற ரக்ஷிதாவை பற்றி கூறியுள்ளார். சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா மகாலட்சுமி 7 வருடங்களுக்கு முன்பு தன்னுடன் நடித்த சக நடிகரான தினேஷ் என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் தான் சம்பாதிக்கும் பணத்தை தன்னுடைய அம்மாவுக்கு கொடுக்கக் கூடாது என்று கணவர் கூறியதால் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தன்னை குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி உள்ளனர்.

Also Read :மகளை பற்றிய உருகிய ராபர்ட் மாஸ்டர்.. அத்தனையும் பொய் என ஆதாரத்தை காட்டும் நெட்டிசன்கள்

ஆனால் ரக்ஷிதா குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் ஆறு மாதம் காலமாவது ஓய்வில் இருக்க வேண்டும். எந்த சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். என்னுடைய செலவுக்கு வருமானம் வேண்டும் என்பதால் ரக்ஷிதா இதை மறுத்து விட்டாராம்.

இதனால் ரக்ஷிதா மற்றும் தினேஷிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரிந்து விட்டதாக பயில்வான் கூறியுள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவுக்கு ரூட் விட்டு வருகிறார். ஏற்கனவே வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் லிவிங் டு கெதர்ரில் இருந்தார்கள்.

அதன்பின்பு படத்தின் பிரமோஷனுக்குத் தான் ராபர்டை பயன்படுத்திக் கொண்டேன் என வனிதா கூறினார். ஆனால் தற்போது ராபர்ட் வீசும் காதல் வலையில் ரக்ஷிதா சிக்காமல் உள்ளார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ரக்ஷிதாவிற்கு ஒரு இயக்குனருடன் திருமணம் நடக்க உள்ளதாக பயில்வான் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Also Read :வேட்டைனு வந்துட்டா மிருகங்கள் இல்லைன்னா எப்படி.. ஆட்டத்தை தொடங்கி வைத்த ஆண்டவர்

Trending News