வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சன் டிவியின் புது சீரியலில் இருந்து விலகும் முக்கியமான ஹீரோ.. என்டரி கொடுக்கப் போகும் புது மாப்பிள்ளை

Sun Tv Serial Hero Replaced: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு இல்லத்தரசிகள் அதிக அளவில் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அதற்கு காரணம் குடும்பங்களை கவரும் வகையில் கதையையும், மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு ஆர்டிஸ்டகளையும் நடிக்க வைத்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது.

அந்த வகையில் சன் டிவியில் எந்த சீரியலில் யார் நடித்தாலும் அவர்கள் மக்களிடம் அதிக அளவில் பிரபலமாகி விடுவார்கள். அதன் மூலம் அடுத்தடுத்து அந்த ஆர்டிஸ்ட்களுக்கு அதிக வாய்ப்புகளும் கிடைத்து விடும். அப்படித்தான் சன் டிவி சீரியல் மூலம் மிகவும் பிரபலமான ஒரு ஹீரோ தற்போது புதுசாக வந்த ஒரு சீரியல் மூலம் மறுபடியும் என்டரி கொடுத்தார்.

அந்த சீரியலும் மக்களிடம் வரவேற்பு பெற்று 100நாட்களை வெற்றிகரமாக தாண்டி இருக்கிறது. ஆனால் இந்த சமயத்தில் சில முக்கியமான வேலைகள் இருப்பதால் சீரியலில் இருந்து அவர் விலகப் போகிறார். அந்த ஹீரோ வேற யாரும் இல்லை செல்வம் என்ற ஒரு கதாபாத்திரம் சொன்னால் நம் நினைவுக்கு வருவது திருமதி செல்வம் தான்.

இந்த சீரியல் மூலம் பிரபலமான ஹீரோ சஞ்சீவ் தான். இதனை தொடர்ந்து எத்தனையோ சீரியல்களில் நடித்திருந்தாலும் திருமதி செல்வம் தான் இவருக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அப்படிப்பட்டவர் சன் டிவியில் புதுசாக ஆரம்பிக்கப்பட்ட லட்சுமி சீரியல் மூலம் மறுபடியும் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நுழைந்தார்.

இதில் சுருதி ராஜ், லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு கணவராக செல்வம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவ் தற்போது இந்த நாடகத்தை விட்டு விலகப் போகிறார். இவருக்கு பதிலாக மகராசி சீரியல் மூலம் பிரபலமான சீரியல் ஆக்டர் ssஆரியன் ஹீரோவாக எண்டரி கொடுக்கப் போகிறார்.

இவருக்கு சமீபத்தில் தான் நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரிதிகா உடன் கல்யாணம் ஆனது. கல்யாணமான புது மாப்பிள்ளை ஆக இருக்கும் இவருக்கு கிடைத்த முதல் சீரியல் லட்சுமி. அந்த வகையில் இனி லட்சுமிக்கு கணவராக செல்வம் என்ற கதாபாத்திரத்தில் ஆரியன் நடிக்கப் போகிறார்.

Trending News