திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சீமான் செய்யப் போகும் சம்பவம்.. 8.22% வச்சிக்கிட்டு இவங்க ஆடுற ஆட்டம் இருக்கே முடியல

Seeman: நாட்டின் 18 வது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக தேர்தல் வைக்கப்பட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 292 இடங்களை மக்களவை தொகுதிகளாக கைப்பற்றியது. அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மட்டும் 240 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு மொத்தம் 8.22% வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வெற்றி கிடைத்து இருக்கிறது. அது மட்டுமின்றி 12 மக்களவைத் தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றது. இதுதான் இவர் படிப்படியாக முன்னேறி கொண்டு வரும் பாதையை வலுப்படுத்துவதற்கு அச்சாணியாக அமைந்திருக்கிறது.

சம்பவம் செய்ய தயாராகிய சீமான்

இதற்கு இடையில் சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதால் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதன்படி விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டது. அதில் ஜூன் 14 முதல் 21ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். ஜூன் 24 ஆம் தேதி வேட்பு மனு பரிசினை நடைபெறும். மற்றும் 26ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறலாம்.

அடுத்ததாக ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூலை 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் திமுக கட்சி சார்பாக அன்னியூர் சிவா போட்டியிடப் போகிறார். அதே மாதிரி பாரதிய ஜனதா கட்சி சார்பாக அண்ணாமலை நிற்கப் போகிறார். அதனால் தானும் தரமான சம்பவத்தை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியுடன் களமிறங்க போகிறார் சீமான்.

இதுவரை அங்கீகரிக்கப்படாத கட்சியை வைத்து போட்டியிட்ட சீமான் முதன்முதலாக 8.22% மக்களிடம் இருந்து ஆதரவை பெற்றதால் நிச்சயம் வெற்றி எங்களுக்கு உண்டு என்ற நோக்கத்தில் களமிறங்க போகிறார். இதற்கிடையில் இவர் வெற்றி பெற்றதற்கு நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

அந்த வகையில் சீமான் உடன் கூட்டணி வைக்கவும் தமிழக வெற்றி கழகத்தில் ஒரு பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. இதனால் இப்போதைக்கு சீமானுக்கு மறைமுகமாக சப்போர்ட் செய்து வருகிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர். இவர்களுடைய கூட்டணி வெற்றி கூட்டணியாக நிற்குமா? வருகிற இடைத்தேர்தலில் சீமானுக்கு சாதகமாக வாக்குப்பதிவு நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News