செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

தென்னைக்கு ஆசைப்பட்டு திண்ணையை பறிகொடுத்த நடிகை.. நயன்தாரா கேரக்டருக்கு ஆசைப்பட்டு கேரியரை தொலைத்த சம்பவம்

என்னதான் நல்ல கதையுள்ள வாய்ப்புகள் வந்தாலும், அந்த கதையை கேட்கும் நடிகர், நடிகைகள் தங்களுக்கு கால்ஷீட் பிரச்சனை, கதை பிடிக்கவில்லை, தங்களுக்கு செட்டாகாது உள்ளிட்ட சொற்ப காரணங்களை கூறி பல ஹிட் படங்களை தவறவிட்ட கதைகள் உண்டு. அப்படி தவறவிடும் படங்களால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பிரபலங்கள் பெரிய வாய்ப்புகளை பெற்று சினிமாவில் வளர்ந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் வாய்ப்பை மறுத்த பிரபலங்கள் பின்னாளில் அதைப் பற்றி நினைத்து புலம்பி வருவதுமுண்டு. அப்படி அண்மையில் பிரபல நடிகை ஒருவர் மெகாஹிட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நயன்தாராவால் கேரியரையே தொலைத்த சம்பவத்தை கூறியுள்ளார். தமிழில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மதுர, கோவில் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சோனியா அகர்வால்.

Also Read: ஹீரோவுக்கு நிகராக தனித்து நின்ற நயன்தாரா.. அலறவிட்ட 5 படங்களின் வசூல் விவரம்

இவர் சினிமாவில் வளர்ந்து வரும் சமயத்தில் இயக்குனர் செல்வராகவனை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு, 2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன் பின் பல வருடங்கள் கழித்து தற்போது வெப் தொடர்கள் மற்றும் சில பேட்டிகளில் கலந்துக்கொண்டு தன்னை பற்றியும், தன் தனிப்பட்ட வாழ்வை பற்றியும் வெளிப்படையாக பேசி வருகிறார்.

அந்த வகையில் தனக்கு வந்த மெகாஹிட் படத்தின் வாய்ப்பை தவறவிட்டதை பற்றி கூறி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 2005 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, அசின் உள்ளிட்டோர் நடிப்பில் மெகாஹிட்டான திரைப்படம் தான் கஜினி. தன் கண்முன்னே காதலியை கொன்றவர்களை பழி வாங்க குறுகிய கால நினைவாற்றலுடன் போராடும் சூர்யா, ஒரு பாதியில் ஆக்ரோஷமாகவும், மற்றொரு பாதியில் பெரும் பணக்காரராகவும் மாஸாக வளம் வருவார்.

Also Read:  பாடல் மட்டும் வெளியாகி பல நாள் கிடப்பில் போடப்பட்ட 5 படங்கள்.. சூர்யா, கார்த்தி சேர்ந்து பாடிய குத்து பாடல்

இப்படம் அந்தாண்டின் சிறந்த படமாக ரசிகர்களுக்கு இன்றுவரை பிடித்த படமாக அமைந்த நிலையில் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடிப் போட்டு நடித்த அசினின் கதாபாத்திரத்தில் நடிக்க முதன்முதலில் சோனியா அகர்வாலை தான் இயக்குனர் அணுகியுள்ளார். ஆனால் இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக வலம் வந்த நயன்தாராவின் கதாபாத்திரத்தில், தான் நடிக்கிறேன் என சோனியா அகர்வால் கூறி அசின் கதாபாத்திரத்தை மறுத்துள்ளார்.

அதன் பின்பு தான் நடிகை அசின் அப்படத்தில் நடித்து பாலிவுட் வரை சென்றார். ஒருவேளை அன்றைக்கு மட்டும் சோனியா அகர்வால் அசினுக்கு பதிலாக கஜினி படத்தில் நடித்திருந்தால், இன்று அவர் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றிருப்பார். தற்போது இவர் பேசிய இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நல்லவேளை நீங்கள் கஜினி படத்தில் நடிக்கவில்லை என ரசிகர்கள் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

Also Read: அந்த கேடுகெட்ட பழக்கத்திற்கு அடிமையான 6 நடிகைகள்.. ரஜினி மிஞ்சிய ஆண்ட்ரியா, அமலா பால்

Trending News