வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சதுரங்க வேட்டை பாணியில் வினோத்துக்கு நடந்த அநியாயம்.. துணிவு உருவாக காரணம் இதுதான்

இயக்குனர் ஹெச் வினோத் தற்போது துணிவு படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். தன்னுடைய முதல் படம் சதுரங்க வேட்டை படத்தில் நூதன வகையில் திருட்டு எப்படி நடக்கிறது என்பதை தெள்ளத்தெளிவாக காட்டி இருந்தார். இதைத்தொடர்ந்து கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கியிருந்தார்.

இந்த சூழலில் அஜித்தை வைத்து வினோத் முதலிலேயே எடுக்க நினைத்த படம் துணிவு. சில காரணங்களினால் அஜித், வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு தான் துணிவு படம் உருவானது. இப்போது துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது.

Also Read : 3 கதைகளை வைத்துக்கொண்டு சுத்தும் ஹெச்.வினோத்.. தனுஷ் உடனே ஓகே சொல்லிய கதை

இந்த படத்தின் பிரமோஷன்காக பல்வேறு ஊடகங்களுக்கு வினோத் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் சதுரங்க வேட்டை பாணியில் தனக்கு வங்கியில் நடந்த கொள்ளையை கூறியுள்ளார். அதாவது சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு படத்திற்காக வங்கியில் வினோத் கணக்கு தொடங்கியுள்ளார். அந்த சூழலில் வினோத்தால் படம் பண்ண முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் சில வருடங்களாக அதில் எந்த பரிவர்த்தனைகளும் செய்யாமல் இருந்துள்ளார்.

அதே வங்கியில் வினோத்தின் நண்பர் பணியாற்றி வந்ததால் சில வருடங்களுக்குப் பிறகு இந்தக் கணக்கை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அப்போதுதான் வினோத்தின் கணக்கை பார்த்தால் அதில் ஒரு ரூபாய் கூட இல்லையாம். கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வினோத் அந்த வங்கியில் பணம் போட்டு இருந்தாராம்.

Also Read : இவரு என்ன வகையறான்னு தெரியல.. எதையுமே கண்டுக்காத அஜித்தையே யோசிக்க வைத்த வினோத்

அதில் குறுஞ்செய்தி, ஜிஎஸ்டி என ஒவ்வொரு மாதமும் சில தொகையை பிடித்துக் கொண்டதால் மொத்தமாக 10,000 ரூபாயையும் வினோத் இழந்துள்ளார். இவ்வாறு வங்கிகளில் பல நூதன திருட்டு நடைபெற்று வருவதாக வினோத் அந்த ஊடகத்தின் பேட்டியில் கூறியிருந்தார். இதன் விளைவாக தான் துணிவு படத்தை வினோத் எடுத்திருப்பார் என்று பலரும் கூறுகிறார்கள்.

அதுமட்டுமின்றி வினோத் பேசியதற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஏனென்றால் ஏடிஎம், மெசேஜ் என ஒவ்வொன்றிற்கும் இப்போது வங்கிகளில் பணம் பிடித்துக் கொள்கிறார்கள். வங்கியில் போதுமான தொகைக்கு குறைவாக இருந்தாலும் பணம் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் நடுத்தர மக்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கிறார்கள்.

Also Read : தீரன் படத்தில் கண் கூச வைத்த காட்சிகள்.. ஆக்சன் படங்களை எடுப்பதற்கு வினோத் சொன்ன கட்டுக்கதை

Trending News