வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விடாமுயற்சிக்காக திரிஷா இடத்தை தட்டி பிடித்த ஐட்டம் நடிகை.. யாருதான் அஜித்துக்கு ஜோடி

Actor Ajith: துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் நடிப்பை மேற்கொண்டு காத்திருக்கும் ரசிகர்களுக்கு, பெரும் சோகம் தான் மிஞ்சி வருகிறது. அந்த அளவிற்கு இப்படம் குறித்து, தாமதம் நிலவி வருகிறது. இதற்கு இடையே புதுசா ஒரு பிரச்சினையாய் இப்படத்தில் யார் தான் ஹீரோயின் என்ற கேள்வியும் எழ தொடங்கிவிட்டது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் மேற்கொள்ளும் படம் தான் விடாமுயற்சி. இப்படம் ஆரம்பத்திலிருந்து தடையாக இருந்து வருகிறது. முதலில் அஜித் பைக் ரைடிங் மேற்கொண்டதால் தாமதம், பின் லைக்கா மேற்கொண்ட வருமானத்துறை சோதனை, தற்பொழுது இப்படத்தில் யார் ஹீரோயின் என்ற புது சோதனை முளைத்துள்ளது.

Also Read: சுயலாபத்திற்காக சூப்பர் ஸ்டாரை சீண்டும் விஜய்.. என்ன கட்டம் கட்டினாலும் உங்க பாட்ஷா பலிக்காது

படத்தின் ஆரம்பத்தில் திரிஷா தான் ஹீரோயின் என கூறப்பட்டது. ஆனால் திரிஷா இப்படம் குறித்த எந்த அட்வான்ஸ் வாங்காமல் இருந்துள்ளார். படம் தொடங்கும் என காத்திருந்த அவர் ஒரு கட்டத்தில் கடுப்பாகி வேறு படத்தில் கமிட் ஆகிவிட்டாராம். தற்பொழுது ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், இதைக் குறித்து திரிஷாவிடம் கேள்வி கேட்கப்பட்டதாம்.

அதற்கு இன்னும் இரண்டு மாதம் வெயிட் பண்ணுங்கள் நான் வேறு ஒரு படத்தில் கமிட் ஆகி விட்டேன் எனவும் கூறியுள்ளார். தற்போது, செய்வது அறியாது, இவர் வரும் வரை காத்திருக்கலாமா இல்லை இவருக்கு பதிலாக தமன்னாவை நடிக்க சொல்லலாமா என பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறதாம்.

Also Read: அஜித்தை பத்தி இனி யாரும் வாயைத் திறக்க கூடாது.. அரசியல் லாபத்திற்காக விஜய் போட்ட கண்டிஷன்

அதுவும் ஒரு மாதமாகவே தமன்னா குறித்த பேச்சு தான் எங்கும் நிலவுகிறது. அந்த அளவிற்கு ஜெயிலர் படத்தில் காவலா பாட்டின் மூலம் பெரிதாக பேசப்பட்டு வருகிறார். இதை சாக்கிட்டு இவரை அஜித்துடன் ஜோடி சேர்த்தால் ரசிகர்கள் இன்னும் ஜாலி ஆவார்கள் எனவும் திட்டம் தீட்டவதாக கூறப்படுகிறது.

தற்போது தமன்னா ட்ரெண்டிங்கில் இருந்து வருவதால் இது போன்ற முடிவா இல்லை, திரிஷா இரண்டு மாதத்திற்கு பிறகு இப்படத்தை மேற்கொள்வாரா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. வெண்ணெய் திரண்டு வரும்போது பானை உடைந்த கதையாய் அஜித்தின் நிலைமை படு மோசமாக மாறி வருகிறது.

Also Read: கேமை மாற்ற வந்த ஹீரோ, கதி கலங்க வைத்த போஸ்டர்.. ப்ராஜெக்ட் கே-வால் பிரபாஸுக்கு வந்த சோதனை

Trending News