வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

Sirakadikkum Asai: சிறகடிக்கும் சீரியல் கதாநாயகிக்கு அடித்த ஜாக்பாட்.. முதல் படத்திலேயே ஹீரோயின் வாய்ப்பு

Sirakadikkum Asai Serial Actress Got Heroine Chance: விஜய் டிவி சீரியலுக்கு கிடைத்த பொக்கிஷமாக சிறகடிக்கும் ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் எதார்த்தமான நடிப்பு மற்றும் நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சண்டை சச்சரவுகளை மையப்படுத்தி வருவதால். அதனால் தான் இந்த நாடகம் ஐந்து மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாக மற்ற மொழியில் உள்ள நாடகத்தை தான் தமிழில் டப் செய்வார்கள். ஆனால் தமிழில் வெற்றிகரமாக ஓடியதால் இந்த நாடகம் மற்ற ஐந்து மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த நாடகத்தில் நடிக்கும் ஒவ்வொரு ஆர்டிஸ்ட்களுக்கும் பெயரும் புகழும் கிடைத்து பிரபலமாக இருக்கிறார்கள்.

sirakadikkum asi seetha
sirakadikkum asi seetha

இதை தொடர்ந்து அவர்களுக்கு மற்ற இடத்திலிருந்தும் புதுப்புது வாய்ப்புகள் தேடிக் கொண்டே வருகிறது. இன்னும் சொல்லப் போனால் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதி பிரியாவுக்கு வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவர் தற்போது இரண்டு நாடகத்தில் பிஸியாக நடிப்பதால் இப்போதைக்கு வெள்ளி திரைக்கு குட் பாய் சொல்லி இருக்கிறார்.

sirakadikkum asai serial
sirakadikkum asai serial

அதே மாதிரி ரோகிணி கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்மா விஜய் டிவியில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பிரபலமானதால் சன் டிவியில் முக்கியமான சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். தற்போது இவர்களை தொடர்ந்து இதில் நடிக்கும் இன்னொரு கதாநாயகிக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

sirakadikkum asai seetha
sirakadikkum asai seetha

அதாவது மீனாவின் தங்கையாக நடிக்கும் சீதா என்கிற சங்கீதா லியோனிஸ் வெள்ளித்திரைக்கு நுழைந்திருக்கிறார். ஆனால் இவர் படித்ததோ பல் மருத்துவராக. இருந்த போதிலும் சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வந்தார். அந்த வகையில் ரஞ்சித் இயக்கத்தில் குற்றம் புதிது என்ற படத்தில் ஹீரோயினாக கமிட் ஆயிருக்கிறார்.

இப்படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்று இருக்கிறது. அதில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் சங்கீதா அவருடைய இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து இன்னும் ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று பதிவிட்டு இருக்கிறார். இவருடைய அடுத்த கட்ட வெற்றிக்கு பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Trending News