வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அட்ட காப்பி அடித்த அனிருத்.. அட்லியால் சர்ச்சையில் சிக்கிய ஜவான்

Jawan: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் வரும் செப்டம்பர் மாதம் வெளிவர இருக்கிறது. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் பாலிவுட்டில் இதுவரை இல்லாத வசூல் சாதனை செய்யும் என பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இதன் மூலம் ஹிந்தியில் அடி எடுத்து வைக்கும் அட்லி அடுத்தடுத்த படங்களுக்கான பேச்சுவார்த்தையிலும் இருக்கிறார்.

Also read: மொக்கையான வரிகளில் ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. தமிழில் அட்லீ-அனிருத் கூட்டணி ஜெயிக்குமா?

மேலும் நயன்தாரா, அனிருத் ஆகியோரும் இதன் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கின்றனர். இப்படி ஜவான் படத்தில் பல விஷயங்கள் இருக்கிறது. ஆனாலும் இப்படம் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் தான் இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் கதையே காப்பி தான் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியான முதல் பாடலும் அதே சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

அதாவது சமீபத்தில் ஜவான் படத்தின் முதல் பாடல் அதிரி புதிரியாக வெளியானது. பொதுவாக கோலிவுட்டில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது என்றால் பாடல் வரிகள் மட்டுமே வெளியிடப்படும். ஆனால் பாலிவுட்டில் முழு பாடலையும் வெளியிட்டு விடுகிறார்கள்.

Also read: லியோவுக்காக தீயாக வேலை செய்யும் விஜய்.. ஜவான் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்

அப்படித்தான் ஜவான் படப்பாடலும் வெளியானது. ஆனால் அதில் இடம்பெற்றுள்ள இசை மாநாடு மற்றும் வலிமை படத்தின் காப்பி என்று ரசிகர்கள் இப்போது சோஷியல் மீடியாவில் ஆதாரத்துடன் வெளியிட்டு வருகின்றனர். இந்த இரு படங்களுக்குமே யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார்.

அந்த வகையில் அனிருத், யுவனை அட்டகாப்பி அடித்து விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த இசை ஏற்கனவே அனிருத் இசையமைத்த பேட்ட படத்தில் வந்துவிட்டது எனவும் ரசிகர்கள் ஆதாரத்தை வெளியிட்டு வருகின்றனர். அப்படி பார்த்தால் அவர் தன் பாடலையே ஹிந்தி பக்கம் அட்டை காப்பியடித்து விட்டார். ஆக மொத்தம் ஏற்கனவே அட்லியால் வந்த குழப்பம் போதாது என்று அனிருத்தால் புது பிரச்சனையை ஜவான் சந்தித்திருக்கிறது.

Also read: விஜய்யா, விஜய் சேதுபதியா உண்மையை உளறிய ஜவான் ஸ்டண்ட் மேன்.. அட்லீயின் கோபத்தை சம்பாதித்த பைட்டர்

Trending News