வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பாக்ஸ் ஆபிஸை மிரள விட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ்.. அவமானப்படுத்தி அனுப்பிய சர்வதேச திரைப்பட விழா

விவேக் அக்னி கோத்ரி இயக்கத்தில் அனுபம் கேர், பல்லவி ஜோஸ், தர்ஷன் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் தி காஷ்மீர் ஃபைல்ஸ். கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த திரைப்படம் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 340 கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸயே மிரள விட்டது.

புலம்பெயர்தல், இனப்படுகொலை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தத் திரைப்படம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. கடந்த இருபதாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா ஒன்பது நாட்கள் வரை நடைபெற்றது.

Also read: மொத்தமாக காலியாகும் பாலிவுட் இண்டஸ்ட்ரி.. வெளியான 26 படங்களில் இந்த ஒரு படம் மட்டுமே வெற்றி

அதன் நிறைவு விழாவில் பேசிய தேர்வு குழு தலைவர் நாடவ் லேபிட் இந்தத் திரைப்படம் குறித்து சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தார். அதாவது இப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் எடுக்கப்பட்ட இழிவான திரைப்படம் என்றும், கௌரவம் வாய்ந்த இது போன்ற விழாவில் காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடப்பட்டது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார்.

மேலும் இந்த படத்தை பார்த்து எனக்கு அதிர்ச்சியும், மன உளைச்சலும் ஏற்பட்டது எனவும் கூறினார். அவருடைய இந்த கருத்துக்கு ரசிகர்கள் முதல் அனைவரும் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த படத்தை அவர் அவமதித்துவிட்டதாக கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

Also read: பூதாகரமாக வெடித்து சாய்பல்லவியின் பேச்சு.. வளர வளர பிரச்சினை வரத்தான் செய்யும்

சர்வதேச அளவில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் அந்த நாட்டைச் சேர்ந்த நாடவ் லேபிட் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். மேலும் இப்படி ஒரு கருத்தை தெரிவித்ததற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இந்த விவகாரம் தற்போது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே இந்த திரைப்படம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து ஒரு வழியாக ரிலீஸ் ஆனது இந்நிலையில் இப்படத்தை அவமதிக்கும் வகையில் வெளிவந்த இந்த விமர்சனம் குறித்து இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் உண்மை எப்போதும் ஆபத்தானது தான், சிலரை பொய் பேசக்கூட வைத்து விடும் என்று தெரிவித்திருக்கிறார்.

Also read: ஜெய் பீம் 2-க்கு தயாராகும் சூர்யா.. இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்

Trending News