சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இத்னானி, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த படம் தான் தி கேரளா ஸ்டோரி. கடந்த 5 ஆம் தேதி வெளிவந்த இப்படம் மிகப்பெரும் எதிர்ப்பலைகளை சந்தித்தது. உண்மை சம்பவத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட இப்படம் ட்ரெய்லர் வெளியான போதே கடும் விமர்சனத்திற்கு ஆளாகியது.
அதைத்தொடர்ந்து படம் வெளியாக கூடாது என அனைத்து தரப்பினரும் போராட்டங்களை கையில் எடுத்தனர். இருப்பினும் சொன்ன தேதியில் படம் வெளிவந்தே தீரும் என பட குழுவும் பல முயற்சிகளை கையில் எடுத்தது. அதன் பலனாக பலத்த போலீஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைக்கு வந்தது.
Also read: நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இடையே நடந்த வசூல் வேட்டை.. தி கேரளா ஸ்டோரி பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்
இருப்பினும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இப்படத்திற்கான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தி கேரளா ஸ்டோரி மற்ற மாநிலங்களில் வசூல் சாதனை படைத்தது. அதை தொடர்ந்து படம் வெளியான ஒரு வாரத்திலேயே 100 கோடி வரை கலெக்சன் பார்த்து பலரையும் வியக்க வைத்தது.
அது மட்டுமின்றி தற்போது படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் வரவேற்பு குறையாமல் வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த வரிசையில் தி கேரளா ஸ்டோரி இப்போது வரை 248 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒரு சேர கொடுத்துள்ளது.
Also read: ஹாலிவுட் படத்தையே ஓவர் டேக் செய்த ‘தி கேரளா ஸ்டோரி’.. ஒரே வாரத்தில் மிரண்டு போன பாக்ஸ் ஆபிஸ் வசூல்
டாப் ஹீரோக்களே நூறு கோடி வசூலை பெறுவதற்கு தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நடிகைகள் அசால்டாக இத்தனை கோடியை தட்டி தூக்கி இருப்பது பெரும் சாதனை தான். அதைத்தான் இப்போது ஒட்டுமொத்த திரையுலகமும் நம்ப முடியாத அதிசயத்தோடு பேசி வருகின்றது.
இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. என்னவென்றால் இந்த படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இப்போது பத்து மடங்கு லாபம் பார்த்திருக்கிறது. இனிவரும் நாட்களில் இந்த வசூல் இன்னும் அதிகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த வகையில் நெகட்டிவ் விமர்சனங்கள் எங்களை ஒன்றும் செய்யாது என்ற ரீதியில் இப்படம் கெத்து காட்டிக் கொண்டிருக்கிறது.
Also read: 10 நாளில் தி கேரளா ஸ்டோரி செய்த சாதனை.. நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் மிரட்டிய வசூல் ரிப்போர்ட்