வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஹாலிவுட் படத்தையே ஓவர் டேக் செய்த ‘தி கேரளா ஸ்டோரி’.. ஒரே வாரத்தில் மிரண்டு போன பாக்ஸ் ஆபிஸ் வசூல்

கடந்த மே 5ம் தேதி சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி நடித்த, ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியதால், இந்த படத்திற்கு தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

அதுமட்டுமல்ல ஒரே வாரத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் சுமார் 37 கோடியை வசூலித்து தற்போது ஹாலிவுட் படத்தையே ஓவர் டேக் செய்துள்ளது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த இந்து இளம் பெண்கள் ஏமாற்றி கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுவது தொடர்பான கதை என்பதால் இந்த படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ஒரு வார வசூல் விவரம் எவ்வளவு தெரியுமா.? மிரண்ட பாக்ஸ் ஆபிஸ்

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தின் வசூல் முதல் வாரத்திலேயே பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் அளவுக்கு இருக்கிறது. ஒருவகையில் படத்திற்கு எதிர்ப்புகள் பூகம்பமாக கிளம்பினாலும் அப்படி இந்த படத்தில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பதை பார்ப்பதற்காகவே பலரும் திரையரங்கில் குவிக்கின்றனர்.

இதனால் முதல் நாள் மட்டும் 8 கோடி வசூலை இந்திய அளவில் வாரி குவித்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளில் 13 கோடியும், மூன்றாவது நாளில் 17 கோடியையும் குவித்தது. அதுமட்டுமல்ல கடைசி மூன்று நாட்களில் மட்டும் 35 கோடியை ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வசூலித்துள்ளது.

Also Read: நாடு முழுக்க அவ்வளவு எதிர்ப்பு.. பாக்ஸ் ஆபிஸை மிரட்டிவிட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் முதல் நாள் வசூல்

இதைவிட ஸ்பெஷல் என்னவென்றால் ஹாலிவுட் திரைப்படமான ‘கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி 3’ படத்தின் வசூலை மிஞ்சியது ‘தி கேரளா ஸ்டோரி’. ஏனென்றால் ‘கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி 3’ படத்தின் வசூலை விட ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ ரூபாய் 5 கோடியை அதிகமாக வசூலித்துள்ளது.

இந்த தகவல் இப்போது இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் தென்னிந்தியாவில் ஏகப்பட்ட எதிர்ப்புகளின் மத்தியிலும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இந்த அளவுக்கு வசூலை வாரிக்குவித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அத்துடன் ‘காக்கிர மாதத்துக்கு தானே கல்லடி என்றும் சிலர் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் வசூலை பார்த்து விமர்சிக்கின்றனர்.

Also Read: பிரம்மாண்டமாக நடந்த 8-வது விஜய் டிவி அவார்டு நிகழ்ச்சி.. ரெண்டு முறை விருதை தட்டிச் சென்ற ஒரே சீரியல்

Trending News