வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

மருமகள்களின் ராஜ்ஜியம் ஓங்கிவிட்டது.. குணசேகரனை மொத்தமாக அடக்கி மூலையில் உட்கார வைத்த அப்பத்தா

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் யாருக்கும் அடங்காத குணசேகரன் அப்பத்தாவிடம் இருக்கும் 40% சொத்துக்காக பொட்டி பாம்பாக அடங்கி விட்டார். இதுதான் என்னுடைய துருப்புச் சீட்டு என்று இதையே வைத்து அப்பத்தா குணசேகரனின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார். என்னதான் அப்பத்தாவாக இருந்தாலும் அந்த 40% சொத்துக்காக மட்டும் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார் குணசேகரன்.

இல்லை என்றால் இந்நேரம் குணசேகரன், அப்பத்தாவை மற்ற பெண்களை நடத்துகிற மாதிரி அடிமையாக்கி இருப்பார். அடுத்ததாக அப்பத்தா வீட்டிற்கு வந்து கீழ் உள்ள பகுதி என்னுடைய 40% பங்கில் அடங்கும். மாடியில் இருப்பது தான் உன்னுடைய போசன் என்று வீட்டை இரண்டாக பிரித்து பங்கு போட்டு விட்டார்.

Also read: கடவுள் இருந்தா எதுக்கு நாட்டுல இவ்ளோ கெட்டது நடக்குது.. கமல் போல் நாத்திகம் பேசும் எதிர்நீச்சல் குணசேகரன்

அடுத்ததாக என் கூட ஜனனி சக்தி என் உயிர் இருக்கிற வரை இந்த வீட்டில் தான் இருப்பார்கள் என்று சொல்கிறார். அதற்கு கதிர் அதெல்லாம் முடியாது அவர்களுக்கு அந்த குடோன் தான் என்று சொல்ல, உடனே அப்பத்தா அப்படி என்றால் கீழ்ப்பகுதிக்கு நீங்கள் யாரும் வரக்கூடாது வெளியே போக வேண்டும் என்றால் மேலே இருந்து வேற வழியே அமைச்சுக்கோங்க என்று பதிலடி கொடுக்கிறார்.

அப்பத்தாவின் இந்த அதிரடியான பதிலை கேட்டு ஏதும் செய்ய முடியாமல் பொட்டி பாம்பாக குணசேகரன் மற்றும் கதிர் அடங்கிப் போகிறார். அத்துடன் இந்த வீட்டில் எனக்கும் உரிமை இருப்பதால் யார் இருக்கணும் இருக்கக்கூடாது என்று முடிவெடுக்கும் உரிமை உண்டு என்று குணசேகரனுக்கு நன்றாக உரைக்கும் படி சொல்கிறார்.

Also read: தரமான படங்கள் 5 கொடுத்தாலும் ஜெயிக்க முடியாத கதிர்.. லோகேஷை மலை போல நம்பி இருக்கும் பிகில் கோச்

இப்படி அப்பத்தா மற்றும் அந்த வீட்டில் இருக்கும் பெண்களின் சுதந்திரம் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்து விட்டது. இனிமேல் தைரியமாக அவர்கள் நினைக்கும் வேலையை செய்து சொந்த காலில் சம்பாதிக்கலாம். இதுவரை ஈஸ்வரி கல்லூரியில் அறிவுரையாளராக குணசேகரனுக்கு தெரியாமல் வேலை பார்த்தார்.

இனி துணிச்சலுடன் அவரின் கண் முன்னே வேலைக்கு போகலாம். இவரை தொடர்ந்து நந்தினி மற்றும் ரேணுகாவும் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்யப் போகிறார்கள். ஆக மொத்தத்தில் இனி அந்த வீட்டில் வேலைக்காரர்களாக குணசேகரன் மற்றும் தம்பிகள் இருக்கப் போகிறார்கள். இந்த ஒரு தருணத்தை இயக்குனர் எப்படி மக்களுக்கு பிடித்த மாதிரி கொண்டு போகிறார் என்பதுதான் மிக சுவாரசியமாக இருக்கப் போகிறது.

Also read: குணசேகரனை முட்டாளாக்கிய அப்பத்தா.. ஜீவானந்தத்தின் குடும்பத்தை சுக்குநூறாக நொறுக்கிய கதிர்

Trending News