வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சௌந்தர்யா இறப்பிற்கு முன் கடைசியாக கேட்ட 2 விஷயங்கள்.. திரும்பி வராமலே போன சோகம்

Actress Soundarya: தன் நடிப்பாலும், அழகாலும் மக்களின் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்த முன்னணி கதாநாயகி தான் சௌந்தர்யா. இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து எண்ணற்ற படங்களில் வெற்றி கண்டுள்ளார்.

தமிழில் 1993ல் பொன்னுமணி படத்தில் அறிமுகமானவர் சௌந்தர்யா. அதன் பின் விஜயகாந்த், ரஜினி, கமல் போன்ற பிரபலங்களுடன் இணைந்து நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக விஜயகாந்த் உடன் சொக்கத்தங்கம் படத்தில் குடும்ப பங்கான நடிப்பினை வெளிகாட்டிருப்பார்.

Also Read: வறுமையை வைத்து எடுக்கப்பட்ட மறக்க முடியாத 5 படங்கள்.. வேலையில்லா இளைஞரின் பசி கொடுமையை காட்டிய கமல்

மேலும் படையப்பாவில் ரஜினிக்கு ஜோடியாக சாந்தமான வசுந்தரா கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார். இவர்கள் இருவரின் ஜோடி பொருத்தம் இப்படத்திற்கு கூடுதல் வெற்றியை பெற்று தந்திருக்கும்.

தமிழில் வெற்றி கண்ட சூர்யவம்சம் படத்தின் ரீமேக் ஹிந்தியில் எடுக்கப்பட்டு, அப்படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவ்வாறு ரசிகர்கள் இடையே தன் நடிப்பாலும், அழகாலும் கனவு கன்னியாய் வலம் வந்தவர் சௌந்தர்யா.

Also Read: சிங்கம் என்ன ரோபோவை அடக்கப் போகிறதா.? சூர்யாவை கிண்டலடித்து வம்பிழுக்கும் பிரபலம்

இவரின் பெயர் தமிழ் சினிமாவில் உச்சத்தை அடையும் போது தான் 2004ல் ஏப்ரல் 17ஆம் தேதி ஏற்பட்ட விமான விபத்தில் இவர் உயர்ந்தார். இந்த விபத்திற்கு முன்புதான் தன் சகோதரனின் மனைவியிடம் இரண்டு விஷயங்களை கேட்டு உரையாடினாராம்.

அவ்வாறு தனக்கு காட்டன் புடவையும், குங்குமம் தருமாறு கேட்ட அவர் பின்பு திரும்ப வரவே இல்லை என உருக்கமாக அவரின் சகோதரரின் மனைவி பதிவிட்டுள்ளார். துரதிஷ்டமாக இவரின் வாழ்க்கை இதோடு முடிந்ததை என்னை சோகத்தில் ஆழ்ந்தனர் ரசிகர்கள். மேலும் இது போன்ற நல்ல திறமை உள்ள நடிகையை தமிழ் சினிமா இழந்து நிற்கிறது.

Also Read: எல்லாரையும் தலையை சொறிய வைக்கும் H. வினோத்.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கமல்

Trending News