வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜெயலலிதா கடைசியாக ஜோடி போட்ட நடிகர்.. இன்று உயிரை விட்ட பரிதாபம்

ஜெயலலிதா ஒரு காலகட்டத்தில் சினிமாவில் கோலோச்சி இருந்தார். அப்போது எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு அதிக படங்களில் நடித்தார். இதனால் கிடைத்த பிரபலம் மற்றும் எம்ஜிஆர் உடன் ஆன நட்பு ஆகியவற்றால் அரசியலில் களம் இறங்கினார்.

சினிமாவைப் போல அரசியலிலும் வெற்றி கண்டு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். ஒரு சிங்கம் போல அவரது குரல் கர்ஜிக்க தொடங்கியது. மேலும் சிங்கப்பெண் என்ற சொல்லுக்கு அடையாளமாக ஜெயலலிதா இருந்தார். பொதுவாக சினிமாவில் இருந்து அரசியல் செல்லும் பிரபலங்களின் கடைசி படம் மிகப்பெரிய பேசு பொருளாக மாறும்.

Also Read : பிரம்மாண்ட நிறுவனம் உருவாக்கிய 5 முதல்வர்கள்.. ஜெயலலிதாவுடன் முடிந்ததை விஜய் தொடுவாரா.!

அந்த வகையில் தற்போது கூட உதயநிதி கடைசியாக மாமன்னன் படத்தில் நடிப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜெயலலிதா உடன் கடைசியாக ஜோடி போட்ட பிரபலம் இன்று மறைந்த செய்தி ரசிகர்களை உலுக்கியுள்ளது. அதாவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடைசியாக நடித்த படம் நதியை தேடி வந்த கடல்.

லெனின் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக சரத்பாபு நடித்திருந்தார். மேலும் ஜெயலலிதா உடன் கடைசியாக நடித்த பெருமை சரத்பாபுவைச் சேரும். அதுமட்டுமின்றி முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெற்றிக்கண், நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற படங்களில் பல அற்புதமான கதாபாத்திரங்களை கொடுத்துள்ளார்.

Also Read : நண்பனின் இழப்பை ஏற்க முடியாத ரஜினி.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சரத்பாபு

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் திரைப்படங்களில் துணை நடிகராகவும் நடித்து தனக்கான முத்திரையை பதித்திருந்தார். 71 வயதாகும் சரத்பாபுவிற்கு உடல்நிலை பிரச்சனை காரணமாக சில மாதங்களாகவே சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

ஆனால் இன்று சிகிச்சை பலனளிக்காமல் சரத் பாபு உயிரிழந்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களை கொடுத்துள்ள சரத்பாபு இன்னும் சில காலம் நலமாக இருந்தால் சிறந்த கதாபாத்திரங்களை நம்மிடம் விட்டுச் சென்றிருப்பார்.

Also Read : சரத்பாபு நடிப்பில் சூப்பர் ஹிட்டான 6 படங்கள்.. ரஜினியுடன் மல்லுக்கட்டிய அசோக்கை மறக்க முடியுமா!

Trending News