செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ரஜினி, கமல் இருவரும் கடைசியாக சங்கமித்த படம்.. இனி ஒன்றாக நடிக்கவே கூடாது என்று சபதம் எடுத்த சம்பவம்

தமிழ் சினிமாவில் இரண்டு ஆளுமைகளான ரஜினி மற்றும் கமல் இருவரையும் ஒரே திரையில் காண வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இப்போது மணிரத்தினம் மீண்டும் இவர்கள் இருவரையும் ஒரு படத்தில் நடிக்க வைக்க திட்டம் தீட்டி இருந்தார். ஆனால் ரஜினி அந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டாராம்.

ஆகையால் கமல்ஹாசன் படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன், ரஜினி கூட்டணியில் பல படங்கள் வெளியாகி உள்ளது. அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, அவள் அப்படித்தான், மூன்று முடிச்சு, இளமை ஊஞ்சலாடுது, நினைத்தாலே இனிக்கும், நட்சத்திரம், அக்னிசாட்சி, அலாவுதீன் அற்புத விளக்கு என எண்ணற்ற படங்கள் இவர்களது கூட்டணியில் வெளியாகி உள்ளது.

Also Read : கமல்ஹாசனுக்காக என் உயிரையே கொடுப்பேன்.. மனம் உருகி பேசிய ரஜினி பட வில்லன்

இவர்கள் இருவரும் ஒரு மாஸ் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவுடன் ஒரே படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டார்கள். அதிலும் ரஜினி தன்னுடைய படத்தில் மற்ற ஹீரோக்கள் நடிப்பதை விரும்ப மாட்டாராம். இந்நிலையில் இவர்கள் இருவரும் இயக்குனர் இமயம் பாலச்சந்தரால் தான் சினிமாவில் உச்சத்தை பெற்றனர்.

கமல், ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான படம் அலாவுதீனும் அற்புத விளக்கும். இந்தப் படம் 1979இல் வெளியாகி இருந்தது. ஆனால் இதற்கு முன்னதாகவே நினைத்தாலே இனிக்கும் படத்தில் நடித்த ரஜினி, கமல் இருவரும் இனிமேல் ஒன்றாக நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

Also Read : மீண்டும் ஒரே திரையில் கமல், ரஜினியை பார்க்க ஆசைப்பட்ட மணிரத்தினம்.. கடைசியில் அந்தர் பல்ட்டி அடித்த ஹீரோ

அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்திற்கு பிறகு தற்போது பல வருடங்கள் ஆகியும் இவர்கள் கூட்டணியில் படம் வெளியாகவில்லை. தற்போது உள்ள இளம் இயக்குனர்களும் ரஜினி, கமல் இருவரையும் சேர்த்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர்.

ஆனால் இவர்கள் இருவரும் சம்மதித்தால் மட்டுமே அவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகும். மேலும் பொன்னியின் செல்வன் விழா மேடையில் ரஜினி, கமல் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி அடைந்தனர். இவர்கள் இருவரையும் ஒரே திரையில் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிறைவேறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : அடுத்தடுத்து வரவிருக்கும் கமலின் 6 படங்கள்.. ரஜினியின் மார்க்கெட்டை உடைக்க தரமான 6 இயக்குனர்களுடன் கூட்டணி

Trending News