வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மரணப் படுக்கையில் சரத்பாபு வாங்கிய கடைசி சத்தியம்.. உயிர் பிரிந்தும் கண்கலங்க வைத்த எஜமான்

அண்மைக்காலமாகவே திரை பிரபலங்களின் மரண செய்தி ஒட்டுமொத்தமாக அனைவரையும் உலுக்கி எடுத்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகரும், இயக்குனருமான மனோபாலா உடல்நல குறைவால் உயிர் நீத்தது பலரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த வருத்தமே மறையாத சூழ்நிலையில் தற்போது சரத்பாபுவும் நம்மை விட்டு பிரிந்திருப்பது மனதை கனக்கச் செய்துள்ளது.

உடல்நல குறைவால் உயிர் நீத்த இவருக்கு தற்போது அனைவரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வரும் இந்த சூழ்நிலையில் அவருடைய கடைசி ஆசை என்ன என்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது இவருடைய உடல் நிலை மோசமாக மாற ஆரம்பித்த பொழுதே சரத்பாபு தன் சகோதரியிடம் ஒரு சத்தியத்தை கேட்டு வாங்கி இருக்கிறார்.

Also read: 80’ஸ் முதல் தற்போது வரை சரத்பாபுவின் புகைப்படங்கள்.. இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாத திரையுலகம்

அதாவது நான் இறந்த பிறகு என்னுடைய இறுதி சடங்கு தமிழ்நாட்டில் தான் நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டாராம். ஆந்திராவில் பிறந்து வளர்ந்த சரத்பாபு தன்னுடைய கடைசி காலத்தை ஹைதராபாத்தில் தான் கழித்து வந்தார். அது மட்டுமின்றி தெலுங்கு திரை உலகிலும் இவர் புகழ்பெற்ற ஒரு நடிகராகவும் இருந்தார்.

அப்படி இருக்கும் இவர் எதற்காக தமிழ்நாட்டில் தனக்கான இறுதி காரியங்கள் நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கான காரணத்தையும் அவர் தன் சகோதரியிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி பணம், புகழ் என அனைத்தையும் கொடுத்தது தமிழ் மண் தான்.

Also read: உயிர் நண்பன் சரத்பாபு உடன் ரஜினி வெற்றி கண்ட 6 படங்கள்.. ஜமீன்தாரை வைத்து அம்பலத்தானுக்கு வைத்த ஆப்பு

அதனால் எனக்கான இறுதி சடங்கு அந்த மண்ணில் தான் நடைபெற வேண்டும் என்று கூறி இறந்திருக்கிறார். தற்போது இந்த விஷயம் பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. எப்படிப்பட்ட நல்ல ஆத்மாவாக இருந்திருந்தால் அவர் தன்னை தூக்கி விட்ட ஏணியை மறக்காமல் இப்படி ஒரு கோரிக்கையை வைத்திருப்பார் என பலரும் சிலிர்த்து போய் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் அவருடைய கடைசி ஆசைப்படி அவருடைய உடல் சொந்த ஊரை விட்டு சாலை மார்க்கமாகவே சென்னையில் இருக்கும் அவருடைய சொந்த வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதை அடுத்து பல நட்சத்திரங்களும் அவருக்கு தங்களுடைய இறுதி அஞ்சலியை நேரில் வந்து செலுத்தினர். இப்படி ஒரு சத்தியத்தை கேட்டு வாங்கி தன்னை ஜென்டில்மேன் என நிரூபித்த இந்த எஜமானின் மறைவு நிச்சயம் தாங்க முடியாத வேதனையை கொடுக்கிறது என்பதே உண்மை.

Also read: நண்பனின் இழப்பை ஏற்க முடியாத ரஜினி.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சரத்பாபு

Trending News