தன்னுடைய சிரிப்பழகால் ரசிகர்களை வசியம் செய்த முன்னணி நடிகை, சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து டாப் ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடித்தார். அதன் பிறகு திருமணம் ஆகி சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தனது உடல் எடையை குறைத்து, கதாநாயகியாக நடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் அந்த மூன்றெழுத்து நடிகையை சந்தித்து தங்களது படங்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இருப்பினும் திருமணம் ஆன பிறகும் கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதைத் தவிர அம்மா, அண்ணி, அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கறாராக பேசி உள்ளாராம்,
எனவே இந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப தயாரிப்பாளர்கள் தங்கள் கதைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்த, அதன்பிறகு அந்த நடிகையை சம்மதிக்க வைக்க போராடுகின்றனர். ஆனால் இவரைப் போன்று எத்தனையோ நடிகைகள் வீர வசனம் பேசி, அதன் பிறகு தங்கள் சொந்த செலவிலேயே படங்களை தயாரித்து மார்க்கெட்டை பிடிக்க துடி துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும் விட்ட மார்க்கெட்டை பிடிக்க முடியாமல் ஒரு சில நடிகைகள் அல்லோலபடுவது போல, இந்த நடிகையின் நிலைமையும் ஆகி விடுமோ என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
அத்துடன் இந்த மூன்றெழுத்து நடிகையை திரையில் காண்பதற்கு அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். எனவே கூடிய விரைவில் இந்த நடிகைக்கு ஏற்ப கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முயற்சிக்கின்றனர்.