ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ரஜினி-170 படத்திற்கு புதுவிதமாக கையாள ஆர்டர் போட்ட தலைவர்.. இந்த மாதிரி ஒரு அறிவிப்பு வந்ததே இல்லை!

Actor Rajini: ஜெயிலர் படத்தைக் கொண்டாடி வரும் ரசிகர்களிடையே மீண்டும் ட்ரீட்டாய் சூப்பர் ஸ்டார் மேற்கொள்ளும் படம் தான் ரஜினி 170. இந்நிலையில் இப்படம் குறித்து வெளியான அறிவிப்பு புதுவிதமாய் இருப்பதாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இம்மாதம் 10 ம் தேதி ஜெயிலர் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் ரஜினி தன் அடுத்த கட்ட படங்களில் பிசியாக இருந்து வருகிறார். தன் 170 வது படத்திற்கான லுக் டெஸ்ட்டையும் முடித்துவிட்டார். மேலும் இப்படம் குறித்த டைட்டிலும் கசிந்துள்ளது.

Also Read: 80ல் கமல் தெறிக்கவிட்ட 5 பாலிவுட் படங்கள்.. நம்ம பொழப்பு போயிடும்னு ஓரங்கட்ட போட்ட சதி தெரியுமா?

ஜெய் பீம் இயக்குனரான ஞானவேல் படத்தை மேற்கொள்ளப் போகிறார். அதற்கான வேலைகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் ரஜினி ஆசைப்பட்டபடி தான் விரும்பிய வேட்டைக்காரன் டைட்டிலையே பெற்று விட்டார்.

மேலும் இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்க பிரபலங்களான அமிதாபச்சன், நானி, மஞ்சு வாரியார் ஆகிய இந்திய ஸ்டார்களை வைத்து படம் இயக்க முடிவு எடுத்துள்ளனர். மேலும் இப்படத்திற்கான துணை நடிகர்களை தேர்ந்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: விஜய்யை போலவே அசிங்கப்பட்ட நடிகர்.. வழுக்கைத் தலை, கேவலமான மீசை என அடியோடு வெறுக்கப்பட்ட ஹீரோ

அதை குறித்து இப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேவை என்று விளம்பரம் செய்யாமல் வித்தியாசமான முறையில் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள், நடன பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே படத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என கூறப்பட்டது. அவை இதுவரை யாரும் செய்யாத அறிவிப்பாக இருந்து வருகிறது.

ஏனென்றால் பட குழு விரும்பும் தகுதியானவர்களை தேர்வு செய்ய நேரம் ஆகும் என்பதற்காக இது போன்ற செயல் எனவும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் ரஜினியின் உடல்நிலை சரியில்லாததால் புதிதாக நடிக்க வருபவர்கள் நிறைய டேக் எடுப்பார்கள் என்பதற்காக இதுபோன்ற முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆகையால் தான் இந்த வித்தியாசமான அறிவிப்பு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

Also Read: அடுத்த வாரம் வசூல் வேட்டைக்கு தயாரான 5 படங்கள்.. ஜெயிலரால் வாழ்வா சாவா என்ற நிலையில் தயாரிப்பாளர்

Trending News