வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கடந்த 23 வருடமாக மோதிக்கொண்ட முன்னணி நடிகர்கள்.. கமல்ஹாசனை ஓவர் டெக் செய்த ஹீரோ

கமல்ஹாசன் இப்பொழுது ஒரு மாஸ் ஹீரோவாக முன்னணியில் இருக்கிறார். ஆனால் இவர் இந்த இடத்திற்கு வருவதற்கு பல வருடங்களாக போராடிய பிறகு இதை கைப்பற்றி இருக்கிறார். பொதுவாகவே இவர் படம் என்றாலே வித்தியாசமாகவும் கதையை யூகிக்க முடியாத அளவிற்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நடிக்க கூடியவர். அப்படிப்பட்ட இவரை ஓவர் டெக் செய்து இருக்கிறார் ஒரு ஹீரோ.

ஆரம்பகாலத்தில் இவர் படங்கள் வெளியாகும் போது இவருக்கு போட்டியாகவே இந்தப் படங்களும் ரிலீஸ் ஆகாமல் தனிக்காட்டு ராஜாவாக வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் ஒருவர் ஹீரோவாக மாறி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த நடிகர் வேறு யாருமில்லை சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.

Also read: கமலுக்கு நோ சொன்ன ரஜினிகாந்த்.. அதுவும் இந்த டாப் இயக்குனரை நழுவவிட்ட சோகம்!

இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இவரது படங்களும் கமல் படமும் ஒரே வருடத்தில் ஒன்றாக ரிலீஸ் செய்து அதன் மூலம் யார் படம் வெற்றி அடைகிறது என்று தெரிந்து கொள்வதற்காக போட்டி போட்டு மோதிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட இவர்கள் 1982 முதல் 2005 வரை 18 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி அதில் யார் படம் அதிக அளவில் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது என்று தெரிந்து கொள்வார்கள்.

அப்படி வெளிவந்த படங்கள் தான் சகலகலா வல்லவன், எங்கேயோ கேட்ட குரல் ,தங்க மகன், தூங்காதே தம்பி தூங்காதே, காக்கி சட்டை, நான் சிவப்பு மனிதன், படிக்காதவன், ஜப்பானில் கல்யாணராமன், புன்னகை மன்னன், மனிதன், நாயகன், தளபதி, குணா போன்ற படங்கள் தொடர்ந்து போட்டி போட்டு வெளிவந்தது. இந்நிலையில் கமலை ஓவர் டெக் செய்யும் அளவிற்கு ரஜினி படம் தான் அதிக அளவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.

Also read: கேரியரை சோலி முடிக்கும் நேரம் வந்தாச்சு.. அசால்டாக 50 கோடி கொடுக்க தயாராகும் சல்மான் கான், ரஜினி

இப்படி இவர்கள் தொடர்ந்து போட்டி போட்டு கொடுத்த மொத்த 18 படத்தில் ரஜினிக்கு அதிகப்படியாக 12 படங்கள் வெற்றியை கொடுத்திருக்கிறது. கமலுக்கு 6 படங்கள் சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது. ஆனாலும் கமல் கொடுத்த 6 படங்கள் தான் என்றாலும் பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக பேசப்பட்டு வருகிறது.

பிறகு ஒரு காலகட்டத்திற்கு பிறகு இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இந்த சடுகுடு விளையாட்டை நிறுத்தி விட்டார்கள். ஆனால் இதன் தொடர்ச்சியாக இப்பொழுது விஜய், அஜித்தும் சில படங்களை ஒன்றாக ரிலீஸ் செய்து மோதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் சமீபத்தில் வெளிவந்த துணிவு மற்றும் வாரிசு படம் வெளியாகி இருவருக்குமே சூப்பர் ஹிட் படமாக ஆனது.

Also read: கமலுடன் இருக்க ஆசைப்படும் விக்ரம் பட நடிகை.. உலகநாயகன் மீது இப்படி ஒரு கிரஷா?

Trending News