திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அண்ணாச்சியின் நம்பிக்கை வீண் போகல.. கோடியில் தொடங்கிய முதல் நாள் வசூல்

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் நடிப்பில் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ‘தி லெஜண்ட்’  திரைப்படம் நேற்று தமிழ்நாட்டில் 800 திரையரங்குகளிலும், உலக அளவில் 2500 திரையரங்கிலும் வெளியானது.

இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி தங்களது விளம்பரப் படங்களை போலவே அண்ணாச்சியின் தி லெஜண்ட் படத்திலும் பிரம்மாண்டத்தை காட்டியுள்ளனர். 40 முதல் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் அண்ணாச்சி என்னதான் செய்திருக்கிறார் என்பதைப் பார்ப்பதற்காக அதிகாலையிலேயே தியேட்டர்களில் ரசிகர்கள் மொய்த்தனர்.

அதன் பிறகு கலவையான விமர்சனத்தை பெற்ற படத்தின் முதல் நாள் வசூல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிறது. தி லெஜண்ட் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூபாய் 2 கோடி வசூலித்து அசத்தி இருக்கிறது.

இதைத்தொடர்ந்து வார இறுதி நாட்களில் இந்த படத்தின் வசூலைப் பொறுத்து தான் அதன் வெற்றி, தோல்வி முடிவாகும் என திரை விமர்சகர்கள் கணித்துள்ளனர். இந்தப்படத்தில் லெஜண்ட் சரவணனுடன் பிரபு, நாசர், ஊர்வசி ரவுத்தேலா, கீத்திகா, ராய் லக்‌ஷ்மி, விவேக், யோகி பாபு, யாஷிகா ஆனந்த், விஜயகுமார், லதா, சுமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இதில் லெஜண்ட் சரவணன் டாப் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ஆக்‌ஷன் காட்சிகளிலும் ரொமான்ஸ் காட்சிகளிலிலும் பெரு முயற்சி செய்து நடித்திருக்கிறார். அவருடைய நம்பிக்கை வீண் போகாத அளவுக்கு முதல் நாள் வசூல் கோடியில் துவங்கி உள்ளது. இந்தப்படத்தில் சரவணன் ஒரு விஞ்ஞானியாக இருக்கிறார்.

தற்சமயம் இளம் வயதினர் கூட சர்க்கரை வியாதியால் அவதிப்படுவதால் அதற்கு தீர்வு காணவேண்டும் என்பதற்காக விஞ்ஞானி சரவணன் எடுக்கும் முயற்சி தான் இந்தப் படத்தின் கதை. இந்தப் படத்திற்கு தற்போது ரசிகர்களிடம் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு தொடர்ந்து நீடித்தால் படம் வெற்றி பெரும் என படக்குழு நம்பிக்கையில் உள்ளது.

Trending News