செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ஓவர் நைட்டில் ட்ரெண்டான ‘தி லெஜெண்ட்’ ட்ரைலர்.. அண்ணாச்சியின் பான் இந்தியா படம் தேறுமா.?

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அண்ணாச்சியின் நடிப்பில் தி லெஜெண்ட் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று மிகவும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.

அதில் விஞ்ஞானியாக நடித்திருக்கும் அண்ணாச்சி காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் போன்ற அனைத்து காட்சிகளிலும் பின்னி பெடல் எடுக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் இருக்கும் பிரம்மாண்டத்தை பார்க்கும்போது அவர் இதற்காக அதிகம் மெனக்கெட்டுள்ளார் என்று தெரிகிறது.

இருப்பினும் ட்ரெய்லரில் வரும் பல காட்சிகளில் செயற்கைத்தனம் அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் அண்ணாச்சியின் முகத்தில் இருக்கும் அதிகபட்ச மேக்கப் அவர் என்ன விதமான ரியாக்சன் கொடுக்கிறார் என்பதை மறைத்து விடுகிறது. அதனால் ஆக்ஷன், சென்டிமென்ட் போன்ற எல்லா காட்சிகளிலும் அவர் ஒரே மாதிரியான முக பாவனையில் இருப்பது போல் தோன்றுகிறது.

அதிலும் அவதாரம் எடுக்கப் போறேன், இறங்கி அடிக்க தயாராகிட்டீங்க, அடிக்கிற அடி மரண அடியா தான் இருக்கும் போன்ற பஞ்ச் டயலாக்குகள் இதுவரை அவரை கலாய்த்து வந்தவர்களுக்கு பதிலடி தரும் வகையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ட்ரெய்லரில் வரும் பல காட்சிகள் மற்றும் அண்ணாச்சியின் உடை போன்றவை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தை நினைவுபடுத்துகிறது.

மேலும் விஜய், அஜித் போன்ற நடிகர்களே பான் இந்தியா திரைப்படத்தை எடுக்க யோசித்து வரும் நிலையில் அண்ணாச்சி முதல் திரைப்படத்திலேயே இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அந்த வகையில் பல கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் லாபத்தை தருமா என்பது சந்தேகம்தான்.

இருப்பினும் துணிச்சலாக இறங்கி பார்க்க முடிவு செய்திருக்கும் அண்ணாச்சியின் இந்த தைரியம் பலரையும் கவர்ந்துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு பிறகு அண்ணாச்சி பிசியான நடிகராக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது அண்ணாச்சியின் இந்த முயற்சிக்கு சோசியல் மீடியாக்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Trending News