புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பெரும் சோகத்தில் தி லெஜன்ட் சரவணன் அண்ணாச்சி.. நம்பி இருந்தவர்கள் கைவிட்ட அவலம்

தனது சொந்த கடை விளம்பரத்தில் முன்னணி நடிகைகளுடன் சேர்ந்து தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அண்ணாச்சி அருள். விளம்பரத்தில் ஏகப்பட்ட விமர்சனத்தை பெற்றாலும் வெகு சீக்கிரமே பிரபலமானதால் விளம்பரத்திற்காக நடிக்கத் துவங்கிய அருள் அண்ணாச்சி, அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.

இவர் நடிக்கவுள்ள ‘தி லெஜென்ட்’ திரைப்படத்தை பிரபல சீரியல் இரட்டை இயக்குனர்களான ஜேடி அண்ட் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள்தான் ஏற்கனவே இவரின் கடையின் விளம்பரத்தையும் இயக்கினார்கள். சமீபத்தில் சரவணன் அண்ணாச்சியின் தி லெஜன்ட் படத்தின் டிரைலர் ரிலீசாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பிரம்மாண்ட காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள் ஜேடி அண்ட் ஜெர்ரி கம்பெனி. ட்ரெய்லரில் வெளிவந்த ஒவ்வொரு காட்சிகளும் பிரம்மாண்டம். சரவணன் அண்ணாச்சி ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் மொத்த படக்குழுவும் வேற லெவலில் வேலை செய்து இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. நிச்சயமாக இது மக்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தப்படத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு அண்ணாச்சி எதிர்பார்த்த நடிகர் சங்கத்தில் இருந்த ஒருவரும் வரவில்லையாம். ஆறுதல் அளிக்கும் விதமாக நாசர் மட்டுமே வந்திருந்தாராம்.

ஆனால் எல்லோருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். வராமல் அனைவரும் ஏமாற்றி விட்டனராம். இதனால் அண்ணாச்சிக்கு சற்று மனவருத்தம் தான் என்று கூறி வருகிறார்கள். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. மொத்த நேரு ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.

ஆனால் நடிகர் சங்கத்தில் இருந்து எதிர்பார்த்தவர்கள் யாரும் வரவில்லை. இவ்வளவுக்கும் அண்ணாச்சி நடிகர் சங்கத்திற்கு நிறைய உதவிகளை செய்துள்ளார். அவர் ஒரு தொழிலதிபராக இருந்த போது அவருக்கு கொடுத்த முக்கியத்துவம் நடிகராக மாறிய பின்பு கிடைக்காதது சரவணன் அண்ணாச்சியை வருத்தமடைய செய்துள்ளது.

Trending News