வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தீபாவளிக்கு முன்பே வெளியாகும் லியோ.. பிரம்மாண்ட வசூலுக்கு பிளான் போடும் டீம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படம் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொடைக்கானலில் சில நாட்கள் சூட்டிங் முடித்த பட குழுவினர் தற்போது காஷ்மீருக்கு படுஜோராக கிளம்பியுள்ளனர். இதற்கான ஒரு வீடியோவை தயாரிப்பு தரப்பு சமீபத்தில் வெளியிட்டு அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருந்தது.

அதைத்தொடர்ந்து வெளியான டைட்டில் வீடியோவும் உச்சகட்ட ஆவலை தூண்டி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில விஷயங்களைப் பார்த்த ரசிகர்கள் எப்போது அக்டோபர் 19 வரும் என்று இப்போதே காலண்டரை பார்க்க தொடங்கி விட்டனர். ஏனென்றால் டைட்டிலை அறிவித்த கையோடு படக்குழு ரிலீஸ் தேதியையும் வெளியிட்டு இருந்தது.

Also read: லியோ படத்தால் மிஸ்கினுக்கு எகுறும் சம்பளம்.. ஒரு நாள் சம்பளத்தை கேட்டு வாயை பிளந்த திரையுலகம்

இதுவரை யாரும் படம் ஆரம்பிக்கும் போது இதுபோன்ற அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்தது கிடையாது. அந்த வகையில் பக்கா பிளான் உடன் களம் இறங்கியுள்ள லியோ டீம் ஆயுத பூஜை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்வதற்கு பின் சில காரணங்களும் இருக்கிறது. ஏனென்றால் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி இரண்டு பண்டிகைகளுக்கும் இடையே சில நாட்கள் இடைவெளி மட்டும் தான் இருக்கிறது.

அப்படி இருக்கும் போது விஜய் படம் தீபாவளிக்கு வராமல் ஆயுத பூஜைக்கு எதற்காக வருகிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதாவது இந்த வருட ஆயுத பூஜை திங்கள், செவ்வாய் கிழமைகளில் வருகிறது. அப்படி பார்த்தால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை தினங்களாக இருக்கிறது. ஆனால் தீபாவளி பண்டிகை இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது.

Also read: லியோ பட ப்ரோமோவை பார்த்து விரக்தியில் அஜித்.. விபரீத முடிவு எடுத்த AK

இந்த காரணத்தால் தான் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. அப்படி பார்த்தால் அடுத்தடுத்த ஆறு நாட்கள் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இருக்காது. இதையெல்லாம் யோசித்து தான் பட குழுவினர் முன்கூட்டியே ரிலீஸ் செய்தியை லாக் செய்து அறிவித்திருக்கின்றனர்.

மேலும் முழு கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் லோகேஷின் முந்தைய திரைப்படங்களின் கதாபாத்திரங்களும் இணைய இருக்கின்றனர். இதுவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also read: தில்ராஜூ நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்.. 1000 கோடி பட்ஜெட்டுடன் களத்தில் குதித்த பிரம்மாண்ட தயாரிப்பாளர்

Trending News