செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தோனிக்கு நம்ம சினிமா கற்றுக் கொடுக்கும் பாடம்.. சிஎஸ்கேவை மனதில் வைத்து தல ஆடும் ஆட்டம்

M S Dhoni: தற்பொழுது தமிழ் சினிமாவில் திரும்பும் பக்கம் எல்லாம் தோனி பற்றிய பேச்சு தான். சிறந்த கிரிக்கெட் வீரராக புகழின் உச்சியில் பேசப்பட்டு வந்த இவர் தற்பொழுது புது அவதாரம் எடுத்தது வருகின்றார். அதை தொடர்ந்து பல பேச்சுக்கள் கிசு கிசுக்க தொடங்கி விட்டது.

மேலும் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ள எம் எஸ் தோனி மேற்கொள்ளும் தன் சொந்த தயாரிப்பான தோனி என்டர்டைன்மெண்ட்ஸ் கீழ் வெளிவர போகும் படம் தான் எல் ஜி எம். அவ்வாறு தோனி தன் புது பரிமாணம் எடுத்துள்ளார். மேலும் இதை கர்நாடகாவில் ஆரம்பிப்பதாக இருந்தார்.

Also Read: பிளாப் சொன்னாலும் எப்படி 100 கோடி வசூலை கொடுக்கும் விஜய் படங்கள்?.. வியாபார யுத்திக்கு பின்னால் இருக்கும் மாபியா கும்பல்

என்ன காரணம், என்னவோ தெரியவில்லை தற்பொழுது தமிழ் சினிமாவை குறி வைத்துள்ளார். அவ்வாறு முதல் புரொடக்ஷனில் உருவாகும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, யோகி பாபு போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்கிறார்கள்.

மேலும் தமிழ் சினிமாவின் பாலிடிக்ஸ் தெரியாமல் இங்கு பட தயாரிப்பை மேற்கொண்டு வரும் தோனி வெற்றி பெற்றால் மட்டுமே அவரின் பெயர் தப்பும், இல்லையென்றால் ஒட்டுமொத்த பெயரும் டேமேஜ் ஆக வாய்ப்பு உள்ளது. இவரைப் போன்று எத்தனையோ சினிமா தயாரிப்பாளர்கள் முயற்சித்து, காணாமல் போய் உள்ளனர்.

Also Read: 15 வருடமாக கை கொடுக்காத சினிமா, அல்லோலப்பட்ட குணசேகரன்.. ரூட்டை மாற்றி தூக்கி விட்ட இயக்குனர்

இதை எதையும் அறியாமல் தோனி முயற்சி செய்து வெற்றி கண்டுவிட்டால் பரவாயில்லை, இல்லையென்றால் சம்பாதித்த காசை விரையம் செய்துவிட்டு தான் போக வேண்டும். இவை அனைத்துக்கும் காரணம் சென்னை அணியை மனதில் வைத்து தான் இங்கே தமிழ்நாட்டில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

அதற்கும் மேலாக சென்னை அணியின் உரிமையாளர் ஆன சீனிவாசன் தான் இத்தகைய ஐடியாவை அவருக்கு கொடுத்துள்ளாராம். அவ்வாறு தோனியை வைத்து இன்னும் இரண்டு ஆண்டுகள் சிஎஸ்கே அணியை வழிநடத்த திட்டம் தீட்டி உள்ளனர். அதனை காரணம் காட்டியே தமிழ்நாட்டில் தோனி பெயரை வளர்த்து விடுகிறார்கள்.

Also Read: புலி வாலை பிடித்தது போல் சந்தானத்திற்கு வந்த கஷ்டம்.. நாலா பக்கமும் சூழ்ந்து கொண்ட கெட்ட நேரம்

Trending News