பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் பெயரை கெடுக்கும் அளவிற்கு இந்தியன் இரண்டாம் பாகம் அமைந்தது. அந்த படத்திற்கு பின்னர் கண்ணை மூடிக்கொண்டு, இவரது படத்தை வாங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.
தற்போது இரண்டாம் பாகம் படங்களில் சங்கர் போல் இல்லாமல் வெற்றி பெற்ற மூன்று இயக்குனர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எடுத்த கதைக்களம் வேறு, சங்கர் இயக்கிய படங்களின் கதைக்களம் வேறு. அப்படி தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களில் வெற்றி கண்ட 3 இயக்குனர்கள்.
சுந்தர் சி: இவரை பற்றி யோசிக்கும் போது அனைவரது கவனத்திற்கும் முதலில் வருவது அரண்மனை தான். இப்படி அமானுஷ்யமான நான்கு பாகங்களை எடுத்து வெற்றி கண்டுள்ளார் சுந்தர் சி. இப்பொழுது ஐந்தாம் பாகத்தையும் எடுக்க தயாராகி வருகிறார்.
ராகவா லாரன்ஸ்: இவரைப் பற்றி சொல்லவே வேண்டாம். முனி- படத்தில் ஆரம்பித்து இன்று காஞ்சனா மூன்றாம் பாகம் வரை எடுத்து முடித்துள்ளார். எல்லா பாகங்களுமே சூப்பர் ஹிட் ஆகி நல்ல வசூலை பெற்று தந்தது.
டிமான்டி காலனி: அருள்நிதி என்றாலே ஹாரர் ஹீரோ என்று பெயர் வாங்கி கொடுத்ததில் பெரும்பங்கு இந்தப் படத்திற்கு உண்டு. இந்த படத்திற்குப் பிறகு அருள்நிதி தொடர்ந்து 5 ஹாரர்படங்களில் நடித்தார். இப்பொழுது டிமான்டி காலனி மூன்றாம் பாகம் ரெடியாக உள்ளது.