Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் போலீஸ் ஸ்டேஷனில் எக்குத்தப்பாக பேசிய விஷயத்திற்கு நல்லா வாங்கி கட்டிக் கொண்டார். பிறகு முத்துவுக்கும் தெரிந்த நிலையில் முத்து வீட்டிற்கு வந்து அண்ணாமலை இடம் சொல்கிறார். உடனே அண்ணாமலையும் மனோஜ் கன்னத்தில் பளார் என்று அறைந்து விடுகிறார்.
இதற்கிடையில் செருப்பு தைக்கும் தாத்தா பாட்டி ஊருக்கு கிளம்பிய நிலையில் அவரிடம் விட்டுட்டு போன ஒரு போன் இருந்ததால் முத்துவிடம் கொடுத்து, அது யாருடைய போன் என்று தெரியவில்லை. நீங்கள் எப்படியாவது கொடுத்து விடுங்கள் என்று அந்த தாத்தா முத்துக் கையில் கொடுத்து விடுகிறார். வீட்டிற்கு வந்த பிறகு அந்த போனை மீனா பார்க்கிறார்.
உடனே மீனா முத்துவும் இது என்னுடைய போன் போல் இருக்கிறது என்று சார்ஜ் போட்டு பார்த்ததும் அது அவர்களுடைய போன் என்பது உறுதி ஆகிவிட்டது. உடனே ஹாலில் இருக்கும் அண்ணாமலையிடம் அப்பா என்னுடைய தொலைந்து போன போன் கிடைத்துவிட்டது என்று சொல்லிய நிலையில் செருப்பு தைக்கும் தாத்தாவிடம் ஒரு பொண்ணு விட்டுட்டு போனதாக என்னிடம் கொடுத்தார் என சொல்கிறார்.
இதை கேட்டதும் அண்ணாமலை அப்படி என்றால் சத்தியா வீடியோவை இந்த போன் மூலமாக தான் வெளியே போனது அதை யார் அனுப்பினார் என்பதையும் கண்டுபிடி என்று சொல்கிறார். முத்துவும் இது நல்ல ஐடியாவாக இருக்கிறது நாங்கள் கண்டுபிடிக்கிறோம் என்று சொல்லி விடுகிறார். இதையெல்லாம் ரூமுக்குள் இருந்து கேட்ட ரோகிணி அப்படி என்றால் வித்யா கடலில் போனை போடவில்லை.
நம்மிடம் பொய் சொல்லி இருக்கிறார் என்று கோபப்பட்டு வித்யா வீட்டிற்கு சென்று வித்யாவிடம் சண்டை போட்டு வாய்க்கு வந்தபடி நீயெல்லாம் என்னுடைய பிரண்டை இல்லை. என்னிடம் பொய் சொல்லி ஏமாற்றுகிறாய். நீ எதுக்கும் லாயக்கு இல்ல வேஸ்ட் என்று வித்தியாவை கோபப்படுத்தி பேசி விட்டார். இதை கேட்டதும் வித்தியாவும், நீ ஆயிரம் பொய் சொல்லி எல்லாரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்.
அதெல்லாம் உனக்கு பெரிய விஷயமாக இல்லை நான் சொன்ன ஒரு பொய் உனக்கு பெருசாக தெரிகிறதா? நீ செஞ்ச பாவத்துக்கு எல்லாம் நான் துணையாக இருந்து வருவதற்கு எனக்கு இன்னமும் வேணும் இதுக்கு மேலயும் வேணும் என்று வித்யாவும் ரோகிணியும் முட்டிக்கொண்டும் அளவிற்கு சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
இதனை அடுத்து முத்து மற்றும் மீனா பேசிக் கொண்டிருக்கும் பொழுது தாத்தா சொன்னது என்னவென்றால் ஒரு பொண்ணு இந்த போனை மறந்து போய் போட்டு போய்விட்டது என்று சொன்னார்கள். அந்தப் பொண்ணு ஏன் பார்லர் அம்மாவாக இருக்கக் கூடாது என்று சந்தேகப்பட்டு முத்து சொல்கிறார். உடனே மீனா, ரோகிணி தான் இதை பண்ணி இருப்பாங்க என்று நினைக்கிறீர்களா என கேட்கிறார்.
அதற்கு முத்து, நிச்சியம் பார்லர் அம்மாவாக தான் இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அவங்களுடைய பிரண்டு வித்தியா கூட இருக்கலாம். அதை நான் கூடிய சீக்கிரத்தில் கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லி மறுநாள் காலையில் நேரடியாக வித்யா வீட்டிற்கு போய் போனை பற்றி விசாரிக்கிறார். அதற்கு வித்யா என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறார்.
இருந்தாலும் வித்யாவின் பார்வையிலும் பேச்சிலையும் இதற்கு பின்னாடி இருப்பது ரோகிணி தான் என்பதை முத்து புரிந்து கொள்ளப் போகிறார். அந்த வகையில் முத்துவுக்கு ரோகிணி தான் சத்யா வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார் என்பது உறுதியாக தெரிந்துவிடும்.
இதனை தொடர்ந்து ரோகிணியின் தில்லாலங்கடி வேலையை கண்டுபிடிப்பதற்கு முழு முயற்சியாக முத்து மற்றும் மீனாவும் இறங்கி விடுவார்கள். இனி தான் ஆட்டமும் சூடு பிடிக்க போகிறது கதையும் விறுவிறுப்பாக போகப் போகிறது என்பதற்கு ஏற்ப முத்து மற்றும் மீனா கையில் சிக்கி சின்னா பின்னமாக ரோகினி மாட்டிக்கொண்டு தவிக்கப் போகிறார்.