வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பிரபல வாரிசு நடிகருக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கதிருக்கு வாழ்க்கை கொடுத்த இயக்குனருடன் போடும் கூட்டணி

சினிமாவில் நடிக்க களமிறங்கும் வாரிசு நடிகர்கள், நடிகைகள் பலர் ஜொலித்து பேரெடுத்து, தங்கள் தாய், தந்தையர் பெயர்களையும் காப்பாற்றுவர். அதிலும் ஒரு படி மேலாக விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது தந்தையையே சாதனையில் பின்னுக்கு தள்ளியவர்கள். இப்படி பல வாரிசு நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கையில், சில நடிகர்கள் வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு சென்றுவிடுவர்.

அதில் ஒரு சில நடிகர்கள் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு படங்களை இயக்குவது, தயாரிப்பது இல்லையென்றால் பிஸ்னஸ் செய்வது என களமிறங்கி விடுவார்கள். மேலும் அந்த நடிகர்கள் நடித்த படங்கள் ஓடாத காரணத்தால் இந்த முடிவை எடுத்துவிடுவார்கள். இருந்தாலும் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையால், ரீ என்ட்ரி கொடுக்கும் வாரிசு நடிகர்களை வைத்து படம் எடுக்க சில இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உலா வருகின்றனர்.

Also Read: ஒரே படத்துடன் காணாமல் போன இயக்குனர்கள்.. விஜய், அஜித்தை வைத்து படமெடுத்தாலும் இதுதான் நிலைமை

அப்படி ஒரு இயக்குனர் தான் விக்ரம் சுகுமாரன். இவர் நடிகர் கதிரின் இயக்கத்தில் மதயானை கூட்டம் என்ற சூப்பர்ஹிட் படம் ஒன்றை இயக்கினார். படம் முழுவதும் கொலை, வன்மம், கோபம் பழிவாங்குவது என விறுவிறுப்பாக இப்படம் உருவாக்கப்பட்டு வெளியானது. இப்படத்தின் வெற்றியால் நடிகர் கதிர் தொடர்ந்து விஜயின் பிகில், மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றிபெற்றார்.

இந்நிலையில் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் வாரிசு நடிகர் ஒருவரை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளார். தமிழில் தான் இயக்கிய 25 படங்களில் 24 படங்களில் அவரே ஹீரோவாக நடித்த ஒரே இயக்குனர் தான் பாக்யராஜ். இவர் 80களில் கொடிக்கட்டி பறந்து பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். இதனிடையே இவரது மகனும் நடிகருமான சாந்தனு சக்கரக்கட்டி படம் மூலமாக தமிழில் ஹீரோவாக அறிமுகமானார்.

Also Read: சாந்தனு பாக்கியராஜின் ‘இராவண கோட்டம்’ படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா ?

ஹீரோவாக நடிக்க கூடிய அனைத்து பொருத்தங்களும் இவருக்கு உள்ள நிலையில் தொடர் பட தோல்வியால் பட வாய்ப்பில்லாமல் பல ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகியிருந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் சாந்தனு ரீ என்ட்ரி கொடுத்த நிலையில், அந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது முழு முயற்சியுடன் இயக்குனர் விக்ரம் சுகுமாரனுடன் கைகோர்த்துள்ளார்.

இராவனக்கோட்டம் என்ற டைட்டிலில் இப்படம் உருவாகி வரும் நிலையில் சாந்தனு பெரிதும் இப்படத்தை எதிர்பாத்து காத்துக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.வாரிசுடனும் துணிவுடனும் முன்நோட்டமாக எங்கள் ராவண கூட்டமும் என்ற பெயரில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது.போஸ்டரின் காளை மாடுடன் சாந்தனு ஓடுவது போன்ற புகைப்படம் இடம்பெற்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

Also Read:சாந்தனுவின் புதிய பட டைட்டில் அறிவிப்பை கேள்விப்பட்டதும் தளபதி விஜய் அனுப்பிய மெசேஜ் இது தான். 

Trending News