செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

4 ஹீரோயின்களுடன் ஜெயம் ரவி செய்யும் மாயாஜாலம்.. குதூகலப்படுத்தும் ஜீனி செகண்ட் லுக் போஸ்டர்

Jayam Ravi-Genie: ஜெயம் ரவிக்கு கடந்த சில வருடங்களாகவே எந்த படங்களும் சரியாக போகவில்லை. அதில் பொன்னியின் செல்வன் மட்டுமே விதிவிலக்கு.

சமீபத்தில் வெளியான சைரன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் வசூல் குறைவு தான். அதனாலேயே அவர் தற்போது நடித்து வரும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.

அதில் வித்தியாசமான முயற்சியாக அவர் நடித்திருக்கும் ஜீனி பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. ஐசரி கணேஷ் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மாயாஜாலம் செய்யும் ஜீனி

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. தலைப்பிற்கு ஏற்றது போல் ஜெயம் ரவி ஜாடிக்குள் இருந்து வெளிவரும் பூதம் போன்ற தோற்றத்தில் இருந்தார்.

அதை பார்த்ததுமே படம் நிச்சயம் ஹிட் என ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வந்தனர். அதேபோல் குழந்தைகளும் ஆர்வத்தோடு பார்க்கக் கூடிய படம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்நிலையில் தற்போது அடுத்த போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நான்கு ஹீரோயின்கள் அதில் இடம்பெற்றுள்ளனர்.

ஜீனி செகண்ட் லுக் போஸ்டர்

genie-jayam ravi
genie-jayam ravi

அதன்படி கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி இவர்களுடன் தேவயானியும் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு அவர் நடிக்கும் தமிழ் படம் இது.

இப்படி பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இருப்பது எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் படக்குழு நாளுக்கு நாள் சர்ப்ரைஸ் கொடுத்து வருகின்றனர்.

மேலும் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் நன்றாக வியாபாரமும் ஆகியுள்ளது. அதனால் சந்தோஷத்தில் இருக்கும் தயாரிப்பாளர் விரைவில் ரிலீஸ் தேதியையும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News