வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்க்கு போட்டியாக கட்சி தொடங்கும் அனகோண்டா.. எங்க வந்து யார் நிற்கிறது.? ஓவர் நக்கல்!

The main actor who is going to start the party after Vijay: தளபதி விஜய் சில நாட்களுக்கு முன் சொந்தமாக அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போகிறார். அதற்காகத்தான் மக்கள் இயக்கத்தின் மூலம் பல உதவிகளையும் செய்து வந்தார். பேரிடர் காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் போன்ற பலவிதமான சமூக சேவைகளையும் செய்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இரண்டாம் தேதி விஜய் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி, அந்த கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் (TVK) என்று பெயர் வைத்து அறிக்கையே வெளியிட்டார். இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து தமிழ் சினிமாவில் பலருக்கும் ஒரு பொறாமையை ஏற்படுத்தியிருக்கிறது. இவரை விட மூத்த நடிகர்களாக பலரும் இருக்கும் பொழுது அவர்களை விட தைரியமாக அரசியலில் இறங்கியது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

இன்னும் சில பேருக்கு விஜய் அரசியலில் இறங்கிவிட்டார் என்ற பொறாமை கூட இருக்கிறது. அந்த பொறாமையில் சில நடிகர்கள் கமுக்கமாக பல வேலைகளை பார்த்து வருகிறார்கள். இப்போ இதுல ஒரு நடிகர் நானும் கட்சியை ஆரம்பிக்க போறேன், அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று இறங்கி இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை அவ்வப்போது அவர் பேசிய வீடியோக்கள் மற்றும் பண்ணுகிற வேலையெல்லாம் பார்க்கும் பொழுது சரியான காமெடி பீஸ் என்று தோன்றும் அளவிற்கு இருக்கும் நடிகர் விஷால்தான்.

Also read: விஜய்யால் பறிபோன பட வாய்ப்புகள்.. ரகசியத்தை உடைத்த விக்ராந்த்

தற்போது விஜய் அரசியலில் இறங்கியதும் இவரும் நானும் அரசியலில் குதிக்க போறேன் அதற்கான கட்சி பெயரை இன்று அறிவிப்பேன் என்று சொன்னதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இவருக்கு ஏற்கனவே அரசியலில் அதிகம் ஆர்வம் இருந்ததால் இதற்கு முன்னதாக சென்னை ஆர்கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சில காரணங்களால் இவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் இவருடைய ரசிகர் மன்றத்தை விஷால் மக்கள் நல இயக்கம் என்று மாற்றி இருக்கிறார். மேலும் இந்த இயக்கத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார். தற்போது சீரியஸாக இவர் அரசியலில் இறங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்ற தகவல் வெளியாயிருக்கிறது.

ஆனால் எந்த ஒரு நம்பிக்கையில் அரசியலில் இறங்குகிறார் என்று தெரியவில்லை. மனசுல என்னமோ ஜெகன்மோகன் ரெட்டின்னு நினைப்பு. எந்த நம்பிக்கையில இங்க வந்து அரசியலில் நிற்கிறார்? முதல்ல இவர் தமிழனே கிடையாது. அப்படி இருக்கும் பொழுது தமிழ்நாட்டில் நிற்பதற்கு என்ன தகுதி இருக்கு என்று பலரும் கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

Also read: வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து விஜய் தோற்ற 5 படங்கள்.. பெரிய அடி கொடுத்த வில்லு படம்

Trending News